செய்திகள் :

Rishab shetty: ராஷ்மிகா அறிமுகம்; தேசிய விருது வென்ற கிட்ஸ் படம்! - ரிஷப் ஷெட்டி, சில சம்பவங்கள்

post image

கன்னட சினிமா உலகில் கடந்த சில வருடங்களாக பேசு பொருளாக மாறி நிற்கிற பெயர், ரிஷப் ஷெட்டி.

நடிகர், இயக்குநர் என இருபக்கமும் சிறப்பாக திகழ்ந்து வருகிறார். அவருடைய படங்கள் பற்றிய ஒரு சிறிய தொகுப்புதான் இது!

துக்ளக்

2012-ம் ஆண்டு வெளிவந்த `துக்ளக்' என்ற திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான இவர், தொடக்கத்தில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஆட்டத்தில் களமிறங்கினார்.

தொடர்ந்து தனது திறமையால் முன்னணி நடிகராகவும், முக்கியமாக இயக்குநராகவும் சாண்டில்வுட்டில் தனக்கென இடம் பிடித்துவிட்டார்.

Rishab Shetty - Kantara Chapter 1
Rishab Shetty - Kantara Chapter 1

ரிஷப் ஷெட்டியின் திரையுலக பயணத்தில் குறிப்பிடத்தக்க படம், ரிக்கி' (2016). இது அவர் இயக்குநராக அறிமுகமான படம். அதே ஆண்டு கிரிக் பார்ட்டி' (Kirik Party) என்ற படத்தையும் இவர் இயக்கியிருந்தார்.

இன்று பேன் இந்தியன் நட்சத்திரமாக வளர்ந்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் அறிமுக திரைப்படமும் இதுதான்.

அந்த படம் கன்னடத்தில் பெரிய வரவேற்பை பெற்றதோடு, பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இத்திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதுகளையும் அவர் வென்றார்

2018-ம் ஆண்டு குழந்தைகளுக்காக பிரத்யேகமாக இவர் இயக்கிய "Sa.Hi.Pra.Shaale, Kasaragodu" படம் தேசிய விருதை வென்றது இவரது குறிப்பிடத்தக்க சாதனை.

அதைத் தொடர்ந்து, `காந்தாரா' (Kantara) என்ற படத்தை தானே இயக்கி, நடித்து, இந்திய அளவில் தனது பெயரை உச்சரிக்கச் செய்தார்.

குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்த படம் பான்-இந்தியா அளவில் மாபெரும் ஹிட்டாகி பெரும் வசூலையும் அள்ளியது.

இவர் மட்டும் அல்லாமல் பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி மற்றும் ராஜ் ஷெட்டியுடன் இணைந்து நல்ல படைப்புகளை கன்னட சினிமாவிற்கு அளித்து வருகின்றனர். இவர்கள் மூவரையும் கன்னட சினிமாவின் 'RRR' என்றே பலரும் குறிப்பிடுவர்.
ரிஷப் ஷெட்டி
ரிஷப் ஷெட்டி

நடிப்பு, இயக்கம், கதை சொல்லும் விதம் என எல்லாவற்றிலும் தனித்துவம் கொண்டவர் ரிஷப் ஷெட்டி.

சாதாரண மனிதரின் வாழ்வையும், அவர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தையும் திரையில் கொண்டுவரும் பாணிதான் அவரை சிறப்பாக்குகிறது.

இன்றைய கன்னட சினிமாவின் வளர்ச்சியில் அவர் வகிக்கும் பங்கு மிகப் பெரியது என்பதை ரசிகர்கள் பெருமையாகச் சொல்கிறார்கள்.

தற்போது இவர் நடித்து இயக்கியிருக்கும் 'காந்தாரா: சேப்டர் 1' (Kantara: Chapter 1) திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

"நான் கன்னட நடிகர் மட்டுமல்ல, பிரிவினை வேண்டாம்" - காந்தாரா நடிகர் ரசிகருக்குச் சொன்ன பதில்!

2022-ம் ஆண்டு 'காந்தாரா' படத்திற்குக் கிடைத்த நாடுதழுவிய வரவேற்பை அடுத்து, இப்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஈஸ்வர பூந்தோட்டமா... மேலும் பார்க்க

Kantara: `ஆபீஸ் பாய் டு பிரமாண்ட இயக்குநர்' - இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த ரிஷப் ஷெட்டி!

கன்னட சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக ரிஷப் ஷெட்டி இன்று பார்க்கப்படுகிறார். யக்ஷகானம் எனும் பாரம்பரியக் கலையில் வேரூன்றி, உடுப்பி மண்ணின் வாசனையைத் திரையில் கொண்டு வந்து, ரசிகர்களை வியக்... மேலும் பார்க்க

Kantara: "அனைத்து இந்திய இயக்குநர்களும் வெட்கப்பட வேண்டும்" - பாராட்டித் தள்ளிய ராம் கோபால் வர்மா

காந்தாரா எனும் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவை கன்னட சினிமா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, அப்படத்தின் அடுத்த பாகமாக எடுத்திருக்கும் `காந்தாரா சாப்டர் 1' திர... மேலும் பார்க்க

காந்தாரா சாப்டர் 1: "இந்திய சினிமாவுக்குப் புதிய பெஞ்ச்மார்க்கை உருவாக்கியிருக்கிறது" - யஷ் பாராட்டு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.தற்போது அதன் ப்ரீக்வலாக 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் நேற... மேலும் பார்க்க

kantara-1: `படத்தை வீடியோ எடுத்து பகிரவோ, பதிவேற்றவோ வேண்டாம்' - ரிஷப் ஷெட்டி வேண்டுகோள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் ப்ரீக்வலாக 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் நே... மேலும் பார்க்க

Kantara: '2016-ல் ஒரு ஷோவிற்காகப் போராடிகிட்டிருந்தேன், ஆனால் இப்போ'- ரிஷப் ஷெட்டி

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் ப்ரீக்வலாக `காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் நே... மேலும் பார்க்க