செய்திகள் :

Kantara: "அனைத்து இந்திய இயக்குநர்களும் வெட்கப்பட வேண்டும்" - பாராட்டித் தள்ளிய ராம் கோபால் வர்மா

post image

காந்தாரா எனும் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவை கன்னட சினிமா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, அப்படத்தின் அடுத்த பாகமாக எடுத்திருக்கும் `காந்தாரா சாப்டர் 1' திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

முதல் பாகத்தைப் போலவே தானே இயக்கி நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி, இப்படத்தில் முதல் பாகத்தின் ப்ரீக்வல் கதையைச் சொல்லியிருக்கிறார்.

Kantara Chapter 1
Kantara Chapter 1

மேலும், இப்படத்தில் ருக்மணி வசந்த், குல்ஷன் தேவயா, ஜெயராம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், ஒரு காலகட்டத்தில் கல்ட் ஃபிலிம் டைரக்டர் எனப் புகழப்பட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா, `காந்தாரா சாப்டர் 1' படத்தைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

ராம் கோபால் வர்மா தன்னுடைய பதிவில், "காந்தாரா அற்புதமான திரைப்படம்.

பி.ஜி.எம், சவுண்ட் டிசைன், ஒளிப்பதிவு, தயாரிப்பு, வி.எஃப்.எக்ஸ் என ரிஷப் ஷெட்டி மற்றும் அவரது குழுவின் நினைத்துப் பார்க்க முடியாத உழைப்பைக் கண்ட பிறகு அனைத்து இந்திய இயக்குநர்களும் வெட்கப்பட வேண்டும்.

தனது கிரியேட்டிவ் டீமை ஆதரித்த Hombale Films-க்கு (தயாரிப்பாளர்) தலைவணங்குகிறேன்.

ரிஷப் ஷெட்டி நீங்கள் சிறந்த இயக்குநரா அல்லது சிறந்த நடிகரா என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை" என்று பாராட்டியிருக்கிறார்.

காந்தாரா சாப்டர் 1 படம் குறித்த உங்களின் கருத்துக்களை கமென்ட்டில் பதிவிடவும்.

Kantara: `ஆபீஸ் பாய் டு பிரமாண்ட இயக்குநர்' - இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த ரிஷப் ஷெட்டி!

கன்னட சினிமாவின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக ரிஷப் ஷெட்டி இன்று பார்க்கப்படுகிறார். யக்ஷகானம் எனும் பாரம்பரியக் கலையில் வேரூன்றி, உடுப்பி மண்ணின் வாசனையைத் திரையில் கொண்டு வந்து, ரசிகர்களை வியக்... மேலும் பார்க்க

காந்தாரா சாப்டர் 1: "இந்திய சினிமாவுக்குப் புதிய பெஞ்ச்மார்க்கை உருவாக்கியிருக்கிறது" - யஷ் பாராட்டு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.தற்போது அதன் ப்ரீக்வலாக 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் நேற... மேலும் பார்க்க

kantara-1: `படத்தை வீடியோ எடுத்து பகிரவோ, பதிவேற்றவோ வேண்டாம்' - ரிஷப் ஷெட்டி வேண்டுகோள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் ப்ரீக்வலாக 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் நே... மேலும் பார்க்க

Kantara: '2016-ல் ஒரு ஷோவிற்காகப் போராடிகிட்டிருந்தேன், ஆனால் இப்போ'- ரிஷப் ஷெட்டி

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் ப்ரீக்வலாக `காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் நே... மேலும் பார்க்க