செய்திகள் :

kantara-1: `படத்தை வீடியோ எடுத்து பகிரவோ, பதிவேற்றவோ வேண்டாம்' - ரிஷப் ஷெட்டி வேண்டுகோள்

post image

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தற்போது அதன் ப்ரீக்வலாக 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் நேற்று (அக்.2) வெளியானது. ருக்மணி வசந்த், குல்ஷன் தேவையா, ஜெயராம் ஆகியோரும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

Kantara Chapter 1
Kantara Chapter 1

`காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தை இயக்கிய ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் 'காந்தாரா' குறித்து பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், அன்பார்ந்த சினிமா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். `காந்தாரா சாப்டர் 1' உங்களுடைய படம்.

இந்தப் படத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கும் அன்பை என்றும் மறக்க முடியாது. ஆனால் தயவுசெய்து படத்தைப் பார்க்க வரும்போது அதனை வீடியோ எடுத்து பகிரவோ, பதிவேற்றவோ செய்ய வேண்டாம் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Kantara Chapter 1
Kantara Chapter 1

பைரசியை நாம் ஊக்குவிக்க வேண்டாம். காந்தாராவின் மாயையை திரையரங்குகளில் உயிரோட்டமாக வைப்போம்.

காந்தாராவை முழுமையாக ரசிக்க சிறந்த ஒரு இடம் திரையரங்குதான்" என்று பதிவிட்டிருக்கிறார்.

காந்தாரா சாப்டர் 1: "இந்திய சினிமாவுக்குப் புதிய பெஞ்ச்மார்க்கை உருவாக்கியிருக்கிறது" - யஷ் பாராட்டு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.தற்போது அதன் ப்ரீக்வலாக 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் நேற... மேலும் பார்க்க

Kantara: '2016-ல் ஒரு ஷோவிற்காகப் போராடிகிட்டிருந்தேன், ஆனால் இப்போ'- ரிஷப் ஷெட்டி

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் ப்ரீக்வலாக `காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் நே... மேலும் பார்க்க

Kantara: Chapter 1 Review: அசரடிக்கும் மேக்கிங் - `காந்தாரா - 2' தனித்து நிற்பது எங்கே?

`காந்தாரா' படத்தின் அடுத்த பாகமாக வந்திருக்கும் இந்த `காந்தாரா சாப்டர் 1', முதல் பாகத்தின் முந்தைய பிளாஷ்பேக் கதையைச் சொல்கிறது. முதல் பாகத்தைப் போலவே இதையும் எழுதி, இயக்கி, நடித்திருக்கிறார் ரிஷப் ஷெ... மேலும் பார்க்க

``ஜூனியர் என்.டி.ஆர் அளவுக்கு இல்லையென்றாலும்''- ருக்மிணி வசந்தை அவமதித்தாரா தயாரிப்பாளர்?

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் `காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் வருகிற அக்டோபர் 2-ம் தேதி திரைக்கு வருகிறது. பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த கன்னட திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன... மேலும் பார்க்க