'நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன்'- ஓய்வு குறித்து ரொனால்டோ
`பாட்டிலுக்கு 10 ரூபாய்’ - எதிர்பார்த்தது எடப்பாடியை; வந்தது செந்தில் பாலாஜி - கோவை ட்விஸ்ட்
கோவை அவிநாசி சாலையில் 10.10 கிமீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கோவை வருகை தர உள்ளார். இதற்காக கோவை திமுக பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் கோவை வந்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி இன்று நாமக்கல் பிரசாரம் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார்.
அவரை வரவேற்பதற்காக அதிமுகவினர் திரளாக கூடியிருந்தனர். அந்த நேரத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, தா.மோ. அன்பரசன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை விமான நிலையம் வந்தனர்.

அமைச்சர்கள் வெளியே வந்தபோது அவர்களைப் பார்த்து அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். ‘புரட்சித் தமிழர் எடப்பாடியார் வாழ்க’, ‘இது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மேம்பாலம்’ என்று கோஷமிட்டனர்.
மேலும் செந்தில் பாலாஜியை பார்த்து, ‘பாட்டிலுக்கு 10 ரூபாய்.’ என்றும் அதிமுகவினர் கோஷம் எழுப்பினார்கள். இருப்பினும் அமைச்சர்கள், செந்தில் பாலாஜி அதை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றனர்.

இந்த சம்பவம் விமான நிலையத்தில் சிறிது நேரம் சலசப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.