``ட்ரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார்'' - ராகுல் காந்தி அடுக்கும் 5 காரணங்கள்
`₹15,000 கோடி முதலீடு; 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு' -தமிழக அரசு அறிவிப்பு; foxcon நிறுவனம் மறுப்பு
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்த சந்திப்பின்போது ஃபாக்ஸ்கான் நிறுவனம் ₹15,000 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டதாக தமிழக அரசு அறிவித்தது.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, "₹15,000 கோடி முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அப்படி எந்தவொரு புதிய ஒப்பந்தமும் போடப்படவில்லை என்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்திருக்கிறது.

இதுதொடர்பான 'TOI' செய்தி நிறுவனத்திற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் அளித்திருக்கும் விளக்கத்தில், "ஃபாக்ஸ்கானின் புதிய இந்தியப் பிரதிநிதியான ராபர்ட் வூ மற்றும் அவரது குழு, தமிழ்நாடு முதல்வர் அவர்களை முதல்வரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்கள். அப்போது புதிய முதலீடுகள் குறித்து எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.
தமிழ்நாட்டில் ₹15,000 கோடி முதலீடு செய்வது என்பது புதிய ஒப்பந்தம் இல்லை. அது ஏற்கனவே கடந்த ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம்தான். அதன்பிறகு தமிழ்நாட்டில் முதலீடுகள் தொடர்பாக எந்தவொரு புதிய ஒப்பந்தமும் போடப்படவில்லை" என்று தெளிவுபடுத்தியிருக்கிறது ஃபாக்ஸ்கான்.

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளாகி தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை வழங்கி மக்களை திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏமாற்றி வருவதாக பாமக அன்புமணி, பாஜக அண்ணாமலை, அதிமுக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் விமர்சித்து வருகின்றனர்.