செய்திகள் :

`இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா?' - ட்ரம்ப் சொல்லும் புது தகவல்!

post image

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால் இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரி என மொத்தம் 50 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா.

இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கும் பணத்தை, அது உக்ரைன் போருக்கு செலவிடுகிறது என்று தொடர்ந்து சாடி வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

இந்த நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப், "இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது எனக்கு பிடிக்கவில்லை. இன்று இந்திய பிரதமர் மோடி தாங்கள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதாக கூறியுள்ளார்.

இது மிகப்பெரிய விஷயம். இப்போது நாம் இதை சீனாவிற்கும் செய்ய உள்ளோம்.

இந்தியாவினால் உடனே இந்த இறக்குமதியை நிறுத்திவிட முடியாது. ஆனால், அது விரைவில் இந்த இறக்குமதியை நிறுத்தும்" என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாடு

இதுவரை இந்தியா, 'தேசத்திற்கு நல்லது எதுவோ, அதைத் தான் இந்தியா செய்யும். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கும்' என்று தான் கூறி வந்தது.

தற்போது ட்ரம்ப் கூறியுள்ளது புதிய தகவலாக இருக்கிறது. ஆனால், இந்த விஷயம் குறித்து இந்தியா இன்னும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

'1 அடி அடித்தால் 2 அடி கொடுப்பேன்; என்னிடம் மிரட்டல் வேண்டாம்' - அண்ணாமலை

கோவை வரதராஜபுரம் பகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கரூரில் 606 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக முதலமைச்சர் கூறுகிறார். ஏடிஜிபி டேவிட்ச... மேலும் பார்க்க

``ட்ரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார்'' - ராகுல் காந்தி அடுக்கும் 5 காரணங்கள்

நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்தும்' என்று பேசியிருந்தார். ராகுல் காந்தி பதிவு இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி த... மேலும் பார்க்க

"விஜய்க்கு எதற்கு ஆதரவாக இருக்கிறோம் என்றால்.!" - கூட்டணி குறித்து தமிழிசை

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (அக்.16) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். விஜய்க்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. கரூர் விஷயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் அரசாங்கம்... மேலும் பார்க்க

GD Naidu பாலம் சர்ச்சை - DMK அரசுக்கு சில கேள்விகள் | MK Stalin | Vikatan

GD Naidu என கோவை அவினாசி பாலத்துக்குப் பெயர் வைத்ததில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் தெருக்கள், சாலைகளில் இருக்கும் சாதி அடையாளப் பெயர்களை நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்கு மா... மேலும் பார்க்க

மதுரை: மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா - அடுத்த மேயர் யார்? திமுகவில் பரபரப்பு!

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது மதுரை திமுக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சிஅமைச்சர் பிடிஆரின் ஆதரவாளரான மேயர் தரப்பிற்கும், பெரும்பாலான த... மேலும் பார்க்க