செய்திகள் :

மதுரை: மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா - அடுத்த மேயர் யார்? திமுகவில் பரபரப்பு!

post image

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது மதுரை திமுக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி

அமைச்சர் பிடிஆரின் ஆதரவாளரான மேயர் தரப்பிற்கும், பெரும்பாலான திமுக கவுன்சிலர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே மோதல் போக்கு நீடித்து வந்தது. சமீபகாலமாக பிடிஆர் மேயர் கணவர் மீது அதிருப்தியுடன் இருந்தார்.

பலகோடி வரி முறைகேடு

இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் பலகோடி ரூபாய் அளவுக்கு வரி முறைகேடு விவகாரம் பெரிய அளவில் எழுந்த நிலையில், அது தொடர்பான வழக்கில் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

ஐந்து மண்டலத்தலைவர்கள், இரண்டு நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டனர். அப்போதே மேயர் இந்திராணியும் ராஜினாமா செய்வார் என்றும், அல்லது நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் நீக்கப்படுவார் என்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் மேயரின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். ஒரு மாதத்திற்கு மேல் சிறையிலிருந்து சமீபத்தில்தான் ஜாமீனில் வெளி வந்தார்.

மேயர் இந்திராணியுடன் கணவர் பொன் வசந்த்
மேயர் இந்திராணியுடன் கணவர் பொன் வசந்த்

ராஜினாமா கடிதம்

மேயர் இந்திராணிக்கு சமீபகாலமாக அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக நெருக்கடி ஏற்பட்டு வந்ததால் பதவியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் நேற்று அளித்தார்.

இந்த தகவல் பரவி மதுரை மாவட்ட திமுக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேயரின் ராஜினாமா கடிதம் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள மாமன்ற கூட்டத்தில், துணை மேயர் நாகராஜன் தலைமையில் கவுன்சிலர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட உள்ளதாக தெரிகிறது.

அடுத்த மேயர் அமைச்சர்கள் பி.மூர்த்தியின் ஆதரவாளரா, பிடிஆரின் ஆதரவாளரா? என்பதுதான் தற்போது திமுக-வினரிடம் பேச்சாக உள்ளது.

`இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா?' - ட்ரம்ப் சொல்லும் புது தகவல்!

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால் இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரி என மொத்தம் 50 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா. இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கும் பணத்தை, அது உக்ர... மேலும் பார்க்க

TN Assembly - Karur விவகாரம் காரசார விவாதம்! | MK STALIN EPS VIJAY TVK DMK ADMK | Imperfect Show

* சட்டப்பேரவைக்கு கருப்புப் பட்டை அணிந்து வந்த அதிமுகவினர் - சபாநாயகரும், அமைச்சரும் கொடுத்த ரியாக்க்ஷன்* “காவல்துறைக்கு சல்யூட் எனக் கூறிவிட்டுதான் அந்த கட்சியின் தலைவர் பேச்சையே தொடங்கினார்”பேரவையில... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: ''சிபிஐ விசாரணை மூலம் பல உண்மைகள் வெளிவரும்''- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

மத்திய மீன் வளத்துறை அமைச்சர் எல்.முருகன் இன்று ராமேஸ்வரம் வந்திருந்தார். இங்குள்ள காஞ்சி சங்கராச்சாரியர் மடத்தில் சிறப்பு யாக பூஜை நடத்திய பின் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இ... மேலும் பார்க்க

ஆந்திராவில் Google AI Hub திட்டம்; "ஆனால் நம்ம முதல்வர் இந்தியைத் தடை செய்ய முயல்கிறார்" - அண்ணாமலை

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, கூகுளின் 'Google AI hub data centre'ஐ ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தில் பெரிய அளவில் கட்டமைக்கத் ... மேலும் பார்க்க