BB Tamil 9 Day 10: உடைந்து அழுத விக்கல்ஸ் விக்ரம்; கன்டென்ட்டை தயார் செய்த பாரு;...
ஸ்ரீவில்லிபுத்தூர்: டாஸ்மாக் சென்றவரை தாக்கி பணம், நகை கொள்ளை; நண்பர் ஏவிய கும்பல் வெறிச்செயல்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி இந்திரா நகரில் வசிப்பவர் முனியசாமி (41). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
முனியசாமி, தன் நண்பரான கனகராஜ் என்பவருடன் வீட்டில் இருந்து டாஸ்மாக் கிளம்பியுள்ளார்.
சிவகாசி ரிசர்வ்லைன் ராஜா காலனியை சேர்ந்தவர் கனகராஜ்.
இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி மெயின் ரோட்டில், பூவநாதபுரம் விலக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது அங்கு வந்த ஒரு கும்பல் முனியசாமியை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்து தங்கச் சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை பறித்தது.
அத்துடன் அவரது வீட்டுச் சாவியைப் பறித்துக்கொண்டு வீட்டுக்கும் சென்றனர். அங்கிருந்த பீரோவில் பணம், நகை மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதன் மொத்த மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் ஆகும். இது குறித்து முனியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டும் பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டது.

அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கனகராஜ் தலைமையிலான சிவகாசி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த ரஞ்சித், சமத்துவபுரம் சரவணன் என்ற சுடலை, முத்துராமலிங்கம் காலனி தவராஜா என்பது தெரிய வந்தது.
பின்னர் கனகராஜ் உள்பட சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் பொருள்களை கைப்பற்றினர். பின் தீவிர விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.