Dude: ``அவருக்கு உரிய மரியாதை கொடுக்கலைனா தப்பு!" - தன்னுடைய உதவியாளருக்கு பிரதீ...
போலீஸால் பாதுகாக்கப்படும் 'போலி' வேட்பாளர்?- கைதுக்காக காத்திருக்கும் 200 காவலர்கள்! - என்ன சிக்கல்?
பஞ்சாப் மாநிலத்தின் ராஜ்யசபா பதவிக்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) வாக்களிக்கும் மறைமுக தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்தத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் ஜனதா கட்சியின் தலைவர் நவ்நீத் சதுர்வேதிவ். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், பஞ்சாப் தேர்தலில் போட்டியிட்டார்.
இவரின் முதல் வேட்புமனுவில் 10 ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ-கள் அவருக்கு ஆதரவளிப்பதாக பெயர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த எம்.எல்.ஏ-க்களின் கையொப்பம் இல்லை என தேர்தல் ஆணையம் அந்த வேட்புமனுவை நிராகரித்துவிட்டது.

அதைத் தொடர்ந்து இரண்டாவதாக ஒரு வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதில் பெயர் குறிப்பிடப்பட்ட 10 வேட்பாளர்களின் கையொப்பம் இருந்தது.
இதற்கிடையில், வேட்புமனுவில் பெயர் குறிப்பிடப்பட்ட 10 எம்.எல்.ஏ-களும் பஞ்சாபின் பல்வேறு பகுதி காவல் நிலையத்தில், 'வேட்புமனுவில் இருப்பது எங்கள் கையெழுத்து அல்ல, எங்கள் கையெழுத்து மோசடி செய்யப்பட்டிருக்கிறது' எனப் புகாரளித்தனர்.
அதன் அடிப்படையில் பஞ்சாப் காவல்துறை நவ்நீத் சதுர்வேதியைக் கைது செய்ய சண்டிகர் வந்திருக்கிறது.
அதேநேரம் நவ்நீத் சதுர்வேதி தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி சண்டிகர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.
எனவே, அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை சண்டிகர் காவல்துறை ஏற்றுக்கொண்டது. அதனால், பஞ்சாப் காவல்துறை அவரைக் கைது செய்வதற்கு அனுமதியளிக்கவில்லை.
இந்த நிலையில், சண்டிகர் காவல் நிலையத்தின் வாசலில் பஞ்சாப் காவல்துறையின் 200 காவலர்கள் காத்திருக்கின்றனர்.

நவ்நீத் சதுர்வேதி காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தால் உடனடியாக கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையில், நவ்நீத் சதுர்வேதி வழக்கறிஞர்கள் முன்ஜாமீன் கோரியும், பஞ்சாப் காவல்துறை அவரைக் கடத்திச் செல்ல முயல்வதாகவும், மாநிலங்களவைக்கான அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரியும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.