TN Assembly - Karur விவகாரம் காரசார விவாதம்! | MK STALIN EPS VIJAY TVK DMK ADMK ...
தலை தீபாவளியைக் கொண்டாடும் இளம் தம்பதிகளே… உங்களுக்கு ஒரு வேண்டுகோள்!
கடந்த ஓராண்டு காலத்தில் திருமணம் ஆன இளம் தம்பதிகள் இந்த ஆண்டு தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடத் திட்டமிட்டிருப்பார்கள். ஒன்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனவர்களும் இந்தத் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாட அனைத்து வகையிலும் பிளான் செய்திருப்பார்கள்.
அவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள்… இந்த தீபாவளியானது இந்த இளம் தம்பதிகளுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருவதாக அமையட்டும்.

தீபாவளி பிளான்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த இளம் தம்பதிகள் தங்கள் எதிர்கால இலக்குகளை எப்படி நிறைவேற்றிக் கொள்ளப் போகிறார்கள் என்பதற்கான திட்டம் ஏதும் வைத்திருக்கிறார்களா?
உதாரணமாக, இந்த இளம் தம்பதிகளுக்கு இன்னும் சில மாதங்களில் ஒன்று, இரண்டு குழந்தை பிறக்கும். இந்தக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் அனுப்ப நிச்சயம் பணம் செலவாகும்.
அதே போல, இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரியவனாக மாறியபிறகு, கல்லூரிக்குச் செல்ல வேண்டும். அதற்கு நிறையவே செலவாகும். இந்தப் பணத்துக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பது முதல் கேள்வி.

குழந்தை வளர்ந்துவரும் அதே சமயத்தில் ஒரு சொந்த வீட்டை வாங்க வேண்டும் என்கிற ஆசை நமக்கு வரலாம். இதற்கான டவுன் பேமென்ட்டை எப்படிக் கட்டப் போகிறார்கள் என்பது அடுத்த கேள்வி.
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பின் அவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும். இதற்கும் பல லட்சம் ரூபாய் செலவாகும்.
தவிர, கார் வாங்க வேண்டும்; இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையாவது சுற்றுலா சென்று வர வேண்டும் என ஒவ்வொருக்கும் பல விதமான கனவு….
எல்லாவற்றுக்கு மேலாக ஓய்வுக் காலத்துக்கான பணத்தை சேர்ப்பது என்பது குறித்து கொஞ்சமாவது யோசித்தாக வேண்டும்.
இப்படி இத்தனை இலக்குகளுக்கான பணத்தை எப்படி சேர்ப்பது, எதில் சேர்ப்பது, அப்படி சேர்க்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, எவ்வளவு லாபம் கிடைக்கும், என்னென்ன ரிஸ்க்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி எல்லாம் இளம் தம்பதிகள் தெரிந்துகொள்வது அவசியம்.

இந்த அத்தனை விஷயங்கள் பற்றி தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொள்வதற்கென ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரபியூஷன் நிறுவனம் ஒரு சிறப்பு ஆன்லைன் கூட்டத்தை வருகிற சனிக்கிழமை அன்று (18.10.25) ஏற்பாடு செய்திருக்கிறது.
இளம் தம்பதிகள் தங்கள் எதிர்கால இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பேசவிருக்கிறார் கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழ்நாடு ஜோனல் ஹெட் பிரசன்னா வெங்கடேஷ்.
இந்தக் கூட்டம் மதியம் 12.00 முதல் 1.00 மணி நடக்கவிருக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமெனில், https://forms.gle/xReKRGTms4kArz7r7 இந்த லிங்க்கினை கிளிக் செய்து தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்வது அவசியம். முன்கூட்டியே பெயரைப் பதிவு செய்துகொள்பவர்களுக்கு மட்டுமே மீட்டிங்கில் கலந்துகொள்வதற்கான லிங்க் அனுப்பப்படும்.
தலை தீபாவளியைக் கொண்டாடும் இளம் தம்பதிகளே, உங்களுக்கு அரிதாக கிடைக்கும் இந்த வாய்ப்பினைத் தவறவிடாதீர்கள்!