BB Tamil 9: "காசு அள்ளி தந்தாலும் அதை எல்லாம் ஆதரித்துப் பாட மாட்டார்" - கானா வி...
பான் கார்டால் ஏற்பட்ட குழப்பம்; சென்னை பக்கமே வராத ஒருவருக்கு சென்னையில் கடன் - பின்னணி என்ன?
சென்னையிலேயே இதுவரை வசிக்காத ஒருவருக்கு, சென்னையில் லோன் எடுத்ததாக சிபில் காட்டுகிறது என்ற உண்மை சம்பவம் ஒன்றை பகிர்கிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வர்தன்.
"என்னுடைய கிளைன்ட் ஒருவர் பெங்களூரில் வசிக்கிறார். அவருக்கு பூர்வீகம் தென் தமிழ்நாட்டில் ஒரு மாவட்டம். பணி நிமித்தமாக பெங்களூரிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
அவர் தற்போது ஒரு லோன் எடுக்க முயற்சி செய்துள்ளார். அவர் ஏற்கெனவே சென்னையில் ஒரு நிலம் வாங்க லோன் எடுத்திருப்பது போல காட்டியுள்ளது. ஆனால், அவர் சென்னை பக்கம் வந்ததே இல்லை.

'இது என்ன?' என்று என்னிடம் பதறிபோய் வந்தார். இதுகுறித்து விசாரித்த போது தான், ஒரே பெயர் கொண்ட இவருக்கும், இன்னொருவருக்கும் ஒரே பான் எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் எடுத்திருக்கும் கடன் இவர் எடுத்ததைப் போல காட்டுகிறது.
முன்பு இருந்த பான் நடைமுறையில், ஒருவரின் பெயரும், தந்தை பெயரும் ஒன்றாக இருந்தால், இருவருக்கும் ஒரே பான் எண் வந்துவிடும்.
இதன் படி தான், என்னுடைய கிளைன்டிற்கு இந்த விஷயம் நடந்துள்ளது.
இப்போது பான் எண்ணை மாற்ற கோரிக்கை வைத்து விண்ணப்பித்துள்ளோம். இனி பான் நிர்வாகம் இருவரில் யார் முதலில் பானுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பதை பார்த்து, அவருக்கு இப்போது இருக்கும் பான் எண்ணைக் கொடுத்துவிடும்.
மற்றொருவருக்கு புதிய பான் எண் வழங்கும். அதற்கான நடைமுறைகள் போய்கொண்டிருக்கிறது.
இப்படியான சம்பவம் எதுவும் நிகழாமல் இருக்க, நமது சிபில் ஸ்கோரை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்வது நல்லது" என்று முடிக்கிறார் விஷ்ணு வர்தன்.