செய்திகள் :

பிரேசில் அதிபருக்கு போன் செய்த ட்ரம்ப்; `எங்கள் மீதான வரியை குறையுங்கள்' கேட்ட லூலா - அடுத்து என்ன?

post image

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது மட்டுமல்ல, பிரேசில் மீதும் கூடுதல் 25 சதவிகித வரியை விதித்திருக்கிறது அமெரிக்கா.

இந்த வரி விதிப்பிற்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார் பிரேசில் அதிபர் லூலா.

சமீபத்தில், பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களை ஒன்றுசேர்த்து ஆன்லைன் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார் லூலா. அதில், 'வரி பிளாக்மெயில் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது' என்று கடுமையாக வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று லூலாவிற்கு போன் செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
அதுகுறித்து லூலா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

"இன்று காலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் இருந்து போன்கால் வந்தது. நாங்கள் 30 நிமிடம் உரையாடினோம். மேலும், ஐ.நா பொதுச்சபையின் போது நியூயார்க்கில் இருவரும் பகிர்ந்துகொண்ட நல்ல தருணங்கள் குறித்து பேசினோம்.

இந்த நேரடி உரையாடல் என்பது மேற்கில் உள்ள இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளின் 201 ஆண்டுகால நட்பை வலுவாக்குவதற்கான வாய்ப்பாக நான் பார்க்கிறேன்.

வரிகளை நீக்க சொல்லி

இந்தப் போன்காலின்போது, ஜி-20 நாடுகளில் அமெரிக்கா வர்த்தக உபரி வைத்திருக்கும் மூன்று நாடுகளில் பிரேசிலும் ஒன்று என்று கூறினேன்.

மேலும், பிரேசில் பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 40 சதவிகித கூடுதல் வரியையும், பிரேசில் அதிகாரிகள் மீது விதித்துள்ள தடைகளையும் நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

அதிபர் ட்ரம்ப் பிரேசில் துணை ஜனாதிபதி ஜெரால்டோ அல்க்மின், வெளியுறவு அமைச்சர் மௌரோ வியேரா மற்றும் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் உடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வெளியுறவுத் துறை செயலர் மார்க் ரூபியோவை நியமித்துள்ளார்.

லூலா
லூலா

அமெரிக்கா செல்லவும்

நாங்கள் இருவரும் விரைவில் சந்தித்துக்கொள்ளவும் முடிவு செய்துள்ளோம். மலேசியாவில் நடக்கும் ஆசியான் கூட்டத்தில் சந்தித்துக்கொள்ளலாம் என்று நான் பரிந்துரைத்தேன்.

பெலெமில் நடைபெறும் COP30-ல் பங்கேற்க ட்ரம்பை வலியுறுத்தினேன். நான் அமெரிக்கா செல்லவும் சம்மதித்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"ஊடகங்களை முடக்கும் பாசிச போக்கு!" - அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டதா புதிய தலைமுறை?

அரசு கேபிளிலிருந்து முன்னணி செய்தி சேனலான புதிய தலைமுறை பல பகுதிகளில் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.கரூர் சம்பவத்தில் அரசை விமர்சிக்கும் தொனியில் வெளியிடப்பட்ட செய்திகளால்தான் புதிய தலைமு... மேலும் பார்க்க

புதிய தலைமுறை : `அரசே கேபிள் நடத்தினால் இதுபோன்ற தவறுகள் நடக்கும்' - பத்திரிகையாளர் ப்ரியன்

கட்டுரையாளர்ப்ரியன், மூத்த பத்திரிகையாளர் அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனல் பிளாக் செய்யப்பட்டிருக்கிறது என்று ஊடக வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் கடந்த மூன்று நாட்களாக பரபரப்பாகப் பேசப்படுகிறத... மேலும் பார்க்க

"இபிஎஸ் உடன் ராமதாஸ் ஐயா தனியாக என்ன பேசினார் என எனக்குத் தெரியாது"- பாமக எம்எல்ஏ அருள்

பாமக நிறு​வனர் ராம​தாஸ் இதய பரிசோதனைக்​காக சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் கடந்த 5-ம் தேதி அனு​ம​திக்​கப்​பட்​டார். முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி போன்ற அரசியல் தலைவர்கள்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக முடியுமா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து என்ன?

தமிழ்நாட்டின் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவ... மேலும் பார்க்க

எஸ்-400 ரஷ்ய ஏவுகணையை வாங்கும் இந்தியா; மீண்டும் அமெரிக்காவை பகைக்கிறதா? ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

இந்தியா ரஷ்யாவில் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை வாங்க முடிவு செய்துள்ளது.எஸ்-400 என்றால் என்ன? எஸ்-400 தரையிலிருந்து வானில் ஏவுகணைகளை ஏவும் ஒரு அமைப்பு ஆகும். 2018-ம் ஆண்டு இதை ரஷ்யாவில் இருந்து இந்த... மேலும் பார்க்க

முடக்கப்பட்டதா புதிய தலைமுறை சேனல்?: ``கருத்து சுதந்திர ஒடுக்குமுறை'' -சென்னை பத்திரிகையாளர் மன்றம்

அரசு கேபிள்களில் 'புதிய தலைமுறை' சேனல் ஒளிபரப்பு முடக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக சென... மேலும் பார்க்க