செய்திகள் :

முடக்கப்பட்டதா புதிய தலைமுறை சேனல்?: ``கருத்து சுதந்திர ஒடுக்குமுறை'' -சென்னை பத்திரிகையாளர் மன்றம்

post image

அரசு கேபிள்களில் 'புதிய தலைமுறை' சேனல் ஒளிபரப்பு முடக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், ``அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ள நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.

தனியார் மற்றும் அரசு கேபிள் நிறுவனங்கள் மற்றும் டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம், செய்தி தொலைக்காட்சிகள் உட்பட அனைத்து தொலைக்காட்சிகளும் மக்களின் பார்வைக்கு சென்றடைகின்றன.

சென்னை பத்திரிகையாளர் மன்றம்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்

தகுதி இருந்தும் செய்தி தொலைக்காட்சிகளுக்கு இந்த சேவையை வழங்க மறுப்பது அல்லது முன்னறிப்பின்றி ஒளிபரப்பை நிறுத்துவது கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும்.

புதியதலைமுறை தொலைக்காட்சி கடந்த இரண்டு தினங்களுக்கு முன், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசு கேபிள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது உண்மை எனும் பட்சத்தில், அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன், நிறுத்தப்பட்ட ஒளிபரப்பை உடனே தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``அரசு கேபிள் டிவி-யில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் ஸ்டாலின் மாடல் திமுக அரசால் முடக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.

கடந்த சில நாட்களாக முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததாக தகவல் வரும் நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்ததும், தற்போது சில இடங்களில் மட்டும் வருவது போல் செய்து, பல இடங்களில் தடையைத் தொடர்ந்து வருகிறது விஞ்ஞான தகிடுதத்தங்களுக்குப் பெயர் போன விடியா திமுக அரசு.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பாசிசப் போக்கின் மொத்த உருவமாக மாறிவிட்ட ஸ்டாலின் அரசு, ஊடகங்களில் தப்பித் தவறிக் கூட தங்களுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது.

அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்களுக்கு முக்கியப் பங்குண்டு. அவற்றை திருத்துவதற்கான வாய்ப்பாகக் கருதாமல், பழி வாங்கும் நோக்கில் இருட்டடிப்பு செய்து முடக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

உடனடியாக அரசு கேபிளில் புதிய தலைமுறை சேனலின் ஒளிபரப்பு தொடரப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக முடியுமா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து என்ன?

தமிழ்நாட்டின் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவ... மேலும் பார்க்க

எஸ்-400 ரஷ்ய ஏவுகணையை வாங்கும் இந்தியா; மீண்டும் அமெரிக்காவை பகைக்கிறதா? ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

இந்தியா ரஷ்யாவில் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை வாங்க முடிவு செய்துள்ளது.எஸ்-400 என்றால் என்ன? எஸ்-400 தரையிலிருந்து வானில் ஏவுகணைகளை ஏவும் ஒரு அமைப்பு ஆகும். 2018-ம் ஆண்டு இதை ரஷ்யாவில் இருந்து இந்த... மேலும் பார்க்க

கேரளா: ரூ.25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி பரிசு; பெயின்ட் கடை தொழிலாளி கோடீஸ்வரர் ஆனார்!

கேரள மாநிலத்தில் அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் லாட்டரி துறை சார்பில் லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வாராந்திர லாட்டரி, விழாக்கால லாட்ட... மேலும் பார்க்க

CJI கவாய் மீது தாக்குதல்: "சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது" - திருமாவளவன் கண்டனம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.கிட்டத்தட்ட அனைத்து மாநில மற்றும் தேசிய கட்சிகளும் தலைவர்களும் நீதிபதி மீதான தாக்க... மேலும் பார்க்க

கமல் ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன், கரூர் த.வெ.க பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போது செய்தி... மேலும் பார்க்க

Kantara: "தர்மத்தையும் துளு நாட்டின் கலாச்சாரத்தையும் சேர்த்துள்ளார் ரிஷப் ஷெட்டி" - அண்ணாமலை ரிவ்யூ

இந்தியா முழுவதும் ஹிட் ஆகியிருக்கும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இன்று சமூக வலைதளத்தில் முக்கிய பேசுபொருளாக இருக்கிறது. விமர்சகர்கள், ரசிகர்கள், திரையுலகினரைக் கடந்து பல துறைகளைச் சேர்ந்தவர்கள் படக்... மேலும் பார்க்க