BB Tamil 9: "காசு அள்ளி தந்தாலும் அதை எல்லாம் ஆதரித்துப் பாட மாட்டார்" - கானா வி...
"இபிஎஸ் உடன் ராமதாஸ் ஐயா தனியாக என்ன பேசினார் என எனக்குத் தெரியாது"- பாமக எம்எல்ஏ அருள்
பாமக நிறுவனர் ராமதாஸ் இதய பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி போன்ற அரசியல் தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் இன்று (அக்.7) பாமக எம்.எல்.ஏ அருள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருக்கிறார்.

"நேற்று முன்தினம் ஒரு பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எல்லா பரிசோதனைகளும் முடிந்து முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இன்று மாலை வீடு திரும்புகிறார்.
இந்த ஒரு வாரம் மட்டும் ஐயா ஓய்வில் இருப்பார். அதன்பிறகு அவர் பணிகளை மேற்கொள்வார்.
பாமக என்றால் ராமதாஸ் ஐயா மட்டும்தான். எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் அதைத் தான் சொல்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ராமதாஸை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அருள், " முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி, ஐயா அவர்களை நேரில் சந்தித்தார்.

அரை மணி நேரம் பேசியது உங்கள் அனைவருக்கும் தெரியும். இரு பெரும் தலைவர்கள் என்ன பேசினார்கள் என்று எனக்கு தெரியாது" என்று கூறியிருக்கிறார்.