கும்பகோணம்: ``அரசுப்பள்ளி கழிப்பறையில் தடுப்புச் சுவர் இல்லை'' - சர்ச்சையான திறப...
``இன்ஸ்டாகிராமில்தான் முதல் அறிமுகம்'' - சோபிதாவுடன் மலர்ந்த காதல் நினைவுகளைப் பகிர்ந்த நாகசைதன்யா
தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன் பிறகு சமந்தா இப்போது வேறு ஒருவரை காதலித்துக்கொண்டிருக்கிறார்.
அதேசமயம் சமந்தாவிடமிருந்து விவாகரத்து பெற்ற நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
காதலிக்கத் தொடங்கிய சில மாதங்களில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கடந்த ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர்.
அவர்களுக்குள் எப்படி காதல் மலர்ந்தது என்பது குறித்து நடிகர் நாக சைதன்யா பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

அவர் தனது பேட்டியில்,
''நான் எனது மனைவியை இன்ஸ்டாகிராமில் சந்தித்தேன். நான் இன்ஸ்டாகிராமில் எனது பார்ட்னரை சந்திப்பேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அவரது வேலைகள் எனக்குத் தெரியும்.
ஒரு முறை இன்ஸ்டாகிராமில் சமையல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தேன். அதனைப் பார்த்த சோபிதா அதற்கு எமோஜியைப் பகிர்ந்து இருந்தார்.
உடனே அவருடன் சாட்டிங் செய்தேன். அதன் பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி சாட்டிங் செய்து பின்னர் சந்தித்துக்கொண்டோம்.
சோபிதா தான் எனக்கு மிகப்பெரிய ஆதரவு. அவர் இல்லாமல் என்னால் வாழமுடியாது. ஒரு முறை சோபிதாவிற்கு நான் வைத்திருந்த நிக்நேமை எனது படத்தில் பயன்படுத்தி இருந்தனர்.
இதனால் சோபிதா கடும் கோபமாகிவிட்டார். நான் தான் படத்தின் இயக்குனரிடம் சொல்லி அந்த நிக்நேமை பயன்படுத்த அனுமதி கொடுத்ததாக நினைத்து சில நாட்கள் என்னுடன் சோபிதா பேசாமல் இருந்தார்'' என்று தெரிவித்தார்.