செய்திகள் :

கடன், கிரெடிட் கார்டு பேமென்ட் சீக்கிரம் கட்டி முடிக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ் இதோ

post image

இந்தக் காலத்தில் இரண்டு, மூன்று கடன்களை வாங்கி... இதுபோக கிரெடிட் கார்டு வாங்கி சிக்கித் திண்டாடிக் கொண்டு இருக்கும் நபர்கள் பல.

அப்படியான நபரா நீங்கள்...? அந்தக் கடன்களை அடைத்துவிட்டு, ஹாயாக நீங்கள் இருப்பதற்கான டெக்னிக்குகள் இதோ...

1. டெப்ட் ஸ்நோ பால்:

நீங்கள் வைத்திருக்கும் கடன்கள் அனைத்திருக்கும் சிறிய பேமென்டுகளை செய்துவிட்டு, எது இருப்பதிலேயே சிறிய கடனோ, அதை முழுமையாக அடையுங்கள்.

இதை தொடர்ந்து செய்துவந்தால், சீக்கிரம் கடன்கள் காலி ஆகிவிடும்.

2. டெப்ட் அவலான்சி:

எந்தக் கடனுக்கு அதிக வட்டி இருக்கிறதோ, அதை முதலில் கட்டி முடியுங்கள்.

அதன் பின், அதற்கு சென்றுகொண்டிருந்த தொகையை, வேறொரு கடனை அடைக்கப் பயன்படுத்துங்கள்.

இதை திரும்ப திரும்ப செய்யும்போது, சீக்கிரம் அனைத்து கடன்களையும் அடைத்து முடித்துவிடுங்கள்.

கடன்
கடன்

3. மாதத் தவணையை அதிகரியுங்கள்!

வருமானம் அதிகரித்தாலோ, வேலையில் இன்கிரிமென்ட் கிடைத்தாலோ, கடன்களுக்கான மாதத் தவணையை சற்று அதிகரித்துக் கட்டுங்கள்.

இது உங்களுடைய கடனை அடைக்க உதவுவதோடு, சீக்கிரமும் கடனை அடைத்து முடித்துவிடலாம்.

4. அதிக பணம் கிடைக்கிறதா..?

திடீரென்று கொஞ்சம் அதிக பணம் கிடைக்கிறதா... போனஸ் கிடைக்கிறதா... சைடு வருமானம் கிடைக்கிறதா - அது அத்தனையையும் செலவு செய்யாமல், கொஞ்சம் கடனை அடைக்கவும் பயன்படுத்துங்கள்.

5. ரீ-பைனான்சிங்

2-3 வங்கிகளில் கடன் வைத்திருந்தால், எந்த வங்கியில் குறைவான வட்டி வசூலிக்கப்படுகிறதோ? அந்த வங்கிக்கு உங்களது கடன்களை மாற்றுங்கள். இதன் மூலம் அனைத்து கடன்களுக்கான வட்டியைக் குறைக்கலாம். இது 'ரீ-பைனான்சிங்' என்ற அழைக்கப்படும்.

கடன்
கடன்

6. கடனைக் கட்ட முடியாமல் போகிறதா?

நீங்கள் கடன் வைத்திருக்கும் வங்கியை அணுகி, உங்கள் நிலைமையை விளக்கி மாற்று யோசனையைக் கேளுங்கள். குறைந்தபட்சம் வட்டியையாவது குறைக்க சொல்லி கேட்டுப்பாருங்கள்.

7. 'இந்த'த் தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்!

மாதா மாதம் சரியாக கடன் தவணையை அடைத்துவிடுங்கள். அதை மட்டும் விட்டுவிடாதீர்கள். ஒருவேளை, நீங்கள் இதை தவறினால், எதாவது எதிர்பாராத சூழல் ஏற்படும் போது, உங்களால் வங்கியிடம் உதவி பெற முடியாது.

8. கடன் காப்பீடு

எதிர்பாராத சூழல்களைத் தவிர்க்க, கடன் எடுக்கும்போதே, கடன் காப்பீட்டையும் எடுத்துவிடுங்கள். இது உங்களுக்கு மிக உதவிகரமாக இருக்கும்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! - மிஸ் பண்ணாதீங்க!

தமிழகத்தில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. அந்த வகையில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை எடுத்துக்கொண்டால், இந்த ஊர்களின் பெருமைகளைப் பற்... மேலும் பார்க்க

தங்கம் விலை: இனி மேலே போகுமா அல்லது இறங்குமா? - தங்க முதலீட்டு நிபுணர் சண்முகநாதன் என்ன சொல்கிறார்?

தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டு இருக்கிறது. சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலையானது கடந்த ஓராண்டு காலத்தில் 1,166 டாலர் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு... மேலும் பார்க்க

Diwali Offers: ஏ.சி, டி.வி, மொபைல் போன்... வாங்கலாமா? இ.எம்.ஐ-க்கு பக்கா பிளானிங் அட்வைஸ்

தீபாவளிக்கு இன்னும் சில நாள்களே உள்ளன.ஆஃபர்களும், தள்ளுபடிகளும் குவிந்துகொண்டு வருகின்றன. பத்தாதற்கு ஜி.எஸ்.டி வரி வேறு குறைக்கப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி குறைப்பால் ஏ.சி, 32 இன்சுக்கு அதிகமான டி.வி.க... மேலும் பார்க்க

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு இனிப்பான செய்தி, வெகுவாகக் குறைகிறது எக்ஸிட் லோட்!

பொதுவாக, ஒரு துறையில் புதிய நிறுவனம் வரும்போது சிலபல அதிரடி சலுகைகளை அறிவித்து, வாடிக்கையாளர்களின் கவனத்தைப் பெற நினைக்கும். அந்த வகையில், மியூச்சுவல் ஃபண்ட் துறையில் சமீபத்தில் நுழைந்த ஜியோ பிளாக்ராக... மேலும் பார்க்க

Retirement: ஒரு தவறான முடிவு, ஓய்வுக் காலத்தையே மாற்றிவிடும்; நீங்க அதைச் செய்றீங்களா?

சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் ஓர் இளைஞர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.''சார், எனக்கு இப்போது 26 வயசு. சம்பளம் ரூ.40,000. ஓய்வுக்காலத் திட்டமிடல் பத்தி எல்லாரும் சொல்றாங்க. ஆனா இப்போதைக்கு கார் வாங்கணும... மேலும் பார்க்க

Gold Rate: தாறுமாறான தங்க விலை ஏற்றம், இந்தியர்கள் அதிகம் வாங்குவதுதான் காரணமா?

தங்கம் விலைதங்கத்தின் விலை கடந்த ஓராண்டு காலத்தில் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் ஓராண்டுக்கு முன்பு சுமார் 2600 அமெரிக்க டாலர்களாக இருந்த ஒரு அவுன்ஸ் (31 கிராம்) தங்கம் விலை தற்போது 3... மேலும் பார்க்க