செய்திகள் :

Money Talks: பணத்தைப் பல மடங்கு பெருக்கும் பக்கா வழி; 70% பேருக்குத் தெரியாத உண்மை என்ன?

post image

நம் வாழ்க்கையில் டாடா, பிர்லா மாதிரி பல ஆயிரம் கோடி ரூபாயைச் சேர்க்க வேண்டும் என்று நாம் ஆசைப்படவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஒன்று, இரண்டு கோடி ரூபாயையாவது சேர்க்க வேண்டும் என்று நாம் ஆசைப்படத்தான் செய்கிறோம். ஆனால், பல வழிகளிலும் பணத்தைச் சேர்த்த பிறகு நம் ஆசை நிறைவேறி இருக்கிறதா? நம்மிடம் இப்போது ஒன்று அல்லது இரண்டு கோடி ரூபாய் அளவுக்குப் பணம் இருக்கிறதா?

shopping
ஷாப்பிங்

வரவும் செலவும்…

இன்றைக்குப் பலருக்கும் இருக்கும் முக்கியமான பிரச்னை, வரவும் செலவும் சரியாக இருப்பதுதான். மாதச் சம்பளம் வாங்குகிற பலரும் சொல்வது என்ன? ‘’நான் சம்பாதிக்கும் பணம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை. வருகிற வருமானம் அனைத்தும் செலவு ஆகிவிடுகிறது’’ என்பதுதான்.

இதற்கு முக்கியமான காரணம், நம்முடைய செலவு நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பதுதான். நம்முடைய வருமானம் மிகக் குறைந்த அளவில் இருக்கும்போது அல்லது நம்முடைய செலவுகள் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது, வருமானம் எல்லாம் செலவாகிவிடுவது பல குடும்பங்களிலும் வழக்கமான விஷயமாக இருக்கிறது.

கிரெடிட் கார்டு கடன்
கிரெடிட் கார்டு கடன்

கடன் வாங்கிச் செலவு…

நம்முடைய செலவு நம்முடைய வரவைவிட அதிகமாக இருக்கும்போது கடன் வாங்கி செலவு செய்கிறோம். ஆனால், கடன் வாங்கிவிட்டால், அதை வட்டியோடுதான் திரும்பக் கட்டவேண்டும். இந்த வட்டி செலவு நம்முடைய பொருளாதார நிலையை மேலும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தும். நம்முடைய வாழ்க்கை தரத்தை மேலும் குறைக்கவே செய்யும்.

நமக்குத் தெரிந்த சேமிப்புகள், முதலீடுகள்…

சேமிப்பு, முதலீடு

நல்ல வேளையாக, நமக்கு வரும் வருமானத்தை எல்லாம் நாம் செலவு செய்துவிடுவதில்லை. அதில் ஒரு பகுதியை எடுத்து சேமிக்கவே செய்கிறோம். உதாரணமாக, வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் மூலம் பணம் சேர்க்கிறோம்.

நமக்குத் தெரிந்த ஒருவர் நடத்தும் சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டுகிறோம். நகை சீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டுகிறோம். இன்ஷுரன்ஸ் திட்டங்களை சேமிப்புத் திட்டங்கள் என்று நினைத்து, பணம் கட்டுகிறோம்.

சரியான முதலீட்டு வழிகள் என்ன?

பணம்

இந்தத் திட்டங்கள் எல்லாம் குறுகிய காலத்துக்கானவை. இந்தத் திட்டங்கள் எல்லாம் சரியானவைதானா, நம்முடைய பணத்தைப் பல மடங்காகப் பெருக்க இன்னும் சிறப்பான திட்டம் ஏதாவது இருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம்.

இந்தத் திட்டங்களை எல்லாம் விட அதிக வருமானம் தரும் திட்டம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் எனில், https://www.youtube.com/watch?v=iNqEmEEO8As என்கிற இந்த வீடியோவை அவசியம் பாருங்கள்.

இந்த வீடியோவைப் பார்ப்பதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால், இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு, அதன்படி நடக்கத் தொடங்கினால், நீங்கள் நினைக்கிற மாதிரி உங்கள் பணத்தைப் பல மடங்காகப் பெருக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை!

தீபாவளி போனஸ் வந்துடுச்சா? அந்தப் பணத்தில் 'இதை' வாங்கிவிட்டால், உங்கள் குடும்பமே சேஃப்

இந்நேரத்திற்கு பெரும்பாலானவர்களுக்கு போனஸ் கையில் கிடைத்திருக்கும். அதை வைத்து துணிமணி வாங்கலாம்... பட்டாசு வாங்கலாம்... மொபைல் போன் வாங்கலாம் என்று ஏகப்பட்ட ஷாப்பிங் லிஸ்டை பிளான் செய்திருப்பீர்கள். ... மேலும் பார்க்க

பான் கார்டால் ஏற்பட்ட குழப்பம்; சென்னை பக்கமே வராத ஒருவருக்கு சென்னையில் கடன் - பின்னணி என்ன?

சென்னையிலேயே இதுவரை வசிக்காத ஒருவருக்கு, சென்னையில் லோன் எடுத்ததாக சிபில் காட்டுகிறது என்ற உண்மை சம்பவம் ஒன்றை பகிர்கிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வர்தன். "என்னுடைய கிளைன்ட் ஒருவர் பெங்களூரில் வசிக்கிறார்... மேலும் பார்க்க

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! - மிஸ் பண்ணாதீங்க!

தமிழகத்தில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. அந்த வகையில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை எடுத்துக்கொண்டால், இந்த ஊர்களின் பெருமைகளைப் பற்... மேலும் பார்க்க

கடன், கிரெடிட் கார்டு பேமென்ட் சீக்கிரம் கட்டி முடிக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ் இதோ

இந்தக் காலத்தில் இரண்டு, மூன்று கடன்களை வாங்கி... இதுபோக கிரெடிட் கார்டு வாங்கி சிக்கித் திண்டாடிக் கொண்டு இருக்கும் நபர்கள் பல. அப்படியான நபரா நீங்கள்...? அந்தக் கடன்களை அடைத்துவிட்டு, ஹாயாக நீங்கள் ... மேலும் பார்க்க

தங்கம் விலை: இனி மேலே போகுமா அல்லது இறங்குமா? - தங்க முதலீட்டு நிபுணர் சண்முகநாதன் என்ன சொல்கிறார்?

தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்துகொண்டு இருக்கிறது. சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலையானது கடந்த ஓராண்டு காலத்தில் 1,166 டாலர் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு... மேலும் பார்க்க

Diwali Offers: ஏ.சி, டி.வி, மொபைல் போன்... வாங்கலாமா? இ.எம்.ஐ-க்கு பக்கா பிளானிங் அட்வைஸ்

தீபாவளிக்கு இன்னும் சில நாள்களே உள்ளன.ஆஃபர்களும், தள்ளுபடிகளும் குவிந்துகொண்டு வருகின்றன. பத்தாதற்கு ஜி.எஸ்.டி வரி வேறு குறைக்கப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி குறைப்பால் ஏ.சி, 32 இன்சுக்கு அதிகமான டி.வி.க... மேலும் பார்க்க