செய்திகள் :

Diwali Tour: ஊட்டி, கொடைக்கானல் போர் அடிச்சுடுச்சா? இங்க விசிட் பண்ணுங்க; சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்

post image

தொடர் விடுமுறை என்றாலே பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வார்கள். ஆனால் சென்னையில் இருப்பவர்கள் வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள். சென்னையில் இருந்து பட்ஜெட்டிற்குள் ட்ரிப் செல்ல ஒரு சூப்பர் ஸ்பாட் பற்றி சொல்லப் போகிறோம்.

கர்நாடகாவில் அமைந்துள்ள சிக்மகளூர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இங்கு இருக்கும் பசுமையான மலைகள், இந்த மாதத்தில் நீங்கள் சென்றால் இருக்கும் இதமான க்ளைமேட், காபி தோட்டங்கள் என இயற்கையோடு இணைந்த இந்த பயணம் உங்களுக்கு மிகக் குறைந்த செலவில் ஒரு தனித்துவமான பயண அனுபவத்தை வழங்கும்.

Chikmagalur

பயணத் திட்டங்கள்

சென்னையில் இருந்து சுமார் 600 கி.மீ தொலைவில் இருக்கும் சிக்மகளூருக்கு நேரடியாக பேருந்து இல்லை என்பதால் பெங்களூர் சென்ற அங்கிருந்து செல்லலாம்.

சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல தினசரி ரயில்கள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிக்மகளூரை முழுமையாக சுற்றிப் பார்க்கவேண்டும் என்றால் இரண்டு முதல் மூன்று நாட்கள் போதுமானதாக இருக்கும். தங்குமிடங்கள் மற்றும் உணவுக்கு ஏற்றவாறு செலவுகள் இருக்கும். இது ஒரு பட்ஜெட் சுற்றுலாவாக இருக்கும்.

எதற்காக சிக்மகளூர் ?

காபி பிரியர்களுக்கு இது சொர்க்கம் என்று கூறலாம். இங்கு காபி எஸ்டேட்டுகள் இருக்கும், தரமான காபிகளை இங்கு சுவைக்கலாம். காபி குடிப்பதற்காக இந்த பயணமா என்று கேட்டால் இல்லை, இங்கு ட்ரெக்கிங், கேம்ப்பிங் செய்வதற்கான இடமாகவும் இருக்கிறது. முக்கியமாக சாகசப் பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த இடம். அமைதியான சூழலை அனுபவிக்க ஒரு சிறந்த இடமாக இது அமையும்.

இதோ சிக்மகளூரில் உள்ள சில முக்கிய சுற்றுலா இடங்கள்

Chikmagalur

முல்லையனகிரி

கர்நாடகாவின் மிக உயரமான சிகரம் இதுவாகும். இங்கிருந்து தெரியும் இயற்கைக் காட்சிகள் பிரமிக்க வைக்கும். மலையேற்றப் பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகும்.

பாபா புதன்கிரி

இது ஒரு பிரபலமான மலையேற்ற இடமாகும். இங்கு முஸ்லிம் மற்றும் இந்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன

கெம்மண்ணுகுண்டி

இந்த மலைவாசஸ்தலம் பசுமையான காடுகள் மற்றும் அருவிகளால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள 'Z பாயின்ட்' என்ற இடத்திலிருந்து சூரிய அஸ்தமனத்தைக் காண்பது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும்.

ஹெப்பே நீர்வீழ்ச்சி

அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு ஜீப் சஃபாரி மூலம் செல்லவேண்டும்.

காபி மியூசியம்

காபியின் வரலாறு, அதன் வகைகள் மற்றும் பதப்படுத்தும் முறைகள் பற்றி அறிந்துகொள்ள விரும்பினால், இந்த அருங்காட்சியகத்திற்குச் செல்லலாம்..

அப்புறம் என்ன நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் இணைந்து பசுமையான குளுமையான இந்த இடத்திற்கு ஒரு ட்ரிப்பை ப்ளான் செய்யலாமே!

பின்லாந்து: உலகின் மகிழ்ச்சியான நாட்டில் இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை; யார் விண்ணப்பிக்கலாம்?

பின்லாந்து, உலகின் மிக மகிழ்ச்சியான நாடாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இந்நாடு தற்போது இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை (Permanent Residency) பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த ஆண்டு உருவாக்கப்ப... மேலும் பார்க்க

போர் முனையின் வீர காவியம்; பயணத்தின் நிறைவுப் புள்ளி | திசையெல்லாம் பனி - 13

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

`Chennai One' ஒரே APP-ல் இனி பஸ், ரயில், கேப், ஆட்டோ எல்லாமே டிக்கெட் புக்கிங் செய்யலாம் - How to?

சென்னையில் பஸ், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்களில் டிக்கெட் எடுக்கவும், கேப், ஆட்டோ புக் செய்யவும் ஆல்-இன்-ஒன் ஆப்பாக ‘சென்னை ஒன்’ செயலியை (APP) தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் நீண்ட வ... மேலும் பார்க்க

Hon Son Doong: மனித காலடி தடமே படாத தனி ஒரு உலகம் - வியட்நாமின் மர்ம குகை பற்றித் தெரியுமா?

பிரிட்டிஷைச் சேர்ந்த ஜேசன் மல்லின்சன், ரிக் ஸ்டன்டான், கிறிஸ் ஜ்வெல் ஆகிய மூவரும் அட்வெஞ்சர் பயணங்கள் மேற்கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள். யாருமே பாதம் பதிக்காத இடத்துக்குள் துணிச்சலாக நுழையும் சாகசக்... மேலும் பார்க்க

முழு நிலவு வெளிச்சத்தில் போர் கதைகள்! - லே முதல் கார்கில் வரை | திசையெல்லாம் பனி- 12

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க