ரங்கராஜ் - ஜாய் கிறிசில்டா விவகாரம்: `இதில் தலையிட எங்களுக்கு அதிகாரம் இருக்கு’ ...
காரைக்குடி: சிறப்பாக நடைபெற்ற மாநில அளவிலான பேட்மிட்டன்!
காரைக்குடி கிருஷ்ணா பேட்மிட்டன் அகாடமியில் செக்காலைக்கோட்டை மற்றும் பள்ளத்தூர் நகரத்தார் சங்கம் சார்பில் மாநில அளவிலான இறகுபந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அருண் நெல்லியான் வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ விசாலம் சிட்ஃபண்ட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் அறமனச் செம்மல் அரு.உமாபதி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

லட்சுமி கருத்தரிப்பு மைய தலைவர் கிருஷ்ணா, பேட்மிட்டன் அகாடமி ( Badminton academy ) நிறுவன தலைவர் டாக்டர் ஜோதி கணேஷ், கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
லட்சுமி செராமிக்ஸ் முத்துராமன் அம்பா பழனியப்பன் வாழ்த்து தெரிவித்தனர். ஆப்டெக் வெங்கடாசலம், கணித ஆசிரியர்கள் ராமன், லட்சுமணன், குவாலிட்டி டோர்ஸ் ராமநாதன், பள்ளத்தூர் வடிவேல், எல்ஐசி முத்தையா, கிரிக்கெட் சங்க செயலாளர் சதீஷ், மீனாட்சி சுந்தரம், வள்ளி வீடியோ செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
ஸ்ரீ விசாலம் சிட் பண்ட் லிமிடெட் ( Sree visalam chit fund ltd ) நிர்வாக இயக்குனர் அரு.உமாபதி கூறுகையில், ஸ்ரீ விசாலம் சிட் பண்ட் லிமிடெட் சேர்மன் அரு.விஸ்வநாதன், இயக்குனர் மீனாட்சி, நிர்வாக இயக்குனரான நான் மற்றும் எங்களது குடும்பத்தார்கள் அனைவரும் பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறோம்.

எங்களது நிறுவனம் காரைக்குடி மற்றும் பள்ளத்தூர் அணிகளுக்கு ஸ்பான்சர் செய்து வருகின்றன". என்றார்.
இப்போட்டியில் காரைக்குடி, சென்னை மதுரை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 16 ஆண்கள் அணி மற்றும் 8 பெண்கள் அணி கலந்து கொண்டன. மாநில அளவிலான இப் போட்டியில் 250 நகரத்தார் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.