Foxconn : 'அது ஒரு Unofficial உடன்பாடு!' - பாக்ஸ்கான் சர்ச்சையும் திமுக-வின் விள...
ஈரோடு: பெண் குழந்தை கடத்தல், வேதனையில் பெற்றோர்; போலீஸார் தீவிர விசாரணை - நடந்தது என்ன?
ஈரோடு மாவட்டம், சித்தோடு கோணவாய்க்கால் என்ற இடத்தில் மேம்பாலத்துக்கு அடியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்,கீர்த்தனா தம்பதி, கடந்த சில மாதங்களாக அங்கு தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் வந்தனா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இரவில் மேம்பாலத்துக்கு அடியில் குடும்பத்துடன் தூங்குவது வழக்கம்.
நேற்று இரவும் வெங்கடேஷ், கீர்த்தனா தம்பதியின் மகன், மகள் இருவரும் மேம்பாலத்துக்கு அடியில் கொசுவலைக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். அருகில், வெங்கடேஷ், கீர்த்தனா இருவரும் தூங்கி உள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை கொசு வலை கிழிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒன்றரை வயது பெண் குழந்தை வந்தனா மாயமாகி இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது மகளை மேம்பாலம் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் அந்தப் பகுதி வழியாக வந்த மர்ம நபர் பெண் குழந்தையைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.