Foxconn : 'அது ஒரு Unofficial உடன்பாடு!' - பாக்ஸ்கான் சர்ச்சையும் திமுக-வின் விள...
ரங்கராஜ் - ஜாய் கிறிசில்டா விவகாரம்: `இதில் தலையிட எங்களுக்கு அதிகாரம் இருக்கு’ - மகளிர் ஆணையம்
'நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து விட்டு ஏமாற்றி விட்டார்' என அவரது முன்னாள் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிசில்டா தந்த புகாரின் மீது தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஆணையம் அனுப்பிய சம்மனையடுத்து ரங்கராஜ், ஜாய் கிறிசில்டா இருவரும் மகளிர் ஆணையத்தில் ஆஜராகினர்.
முன்னதாக நேற்று ரங்கராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். அதில்,`நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிஸ்டில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிஸ்டில்டா எதிர்பார்ப்பது போல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

`ஜாய் கிறிசில்டா மகளிர் ஆணையத்தில் புகார் செய்தைதையே கோர்ட்டுக்கு வெளியில் தீர்வு காண முயல்கிறார்' என ரங்கராஜ் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லும் ஜாய் கிறிசில்டாவின் நண்பர்கள் சிலர், 'மகளிர் ஆணையம்' அரசால் அமைக்கப்பட்ட அமைப்பு. அங்கு முறையிடுவது சட்டபூர்வமான ஒரு நடவடிக்கையே. அதில் தவறேதும் இல்லை' என்கின்றனர்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரியிடம் நாம் பேசினோம்.
''ஜாய் கிறிசில்டா ஆணையத்துல வந்து புகார் தந்திருக்காங்க. அந்தப் புகார் மீது ஆணையத்துக்கு உள்ள அதிகாரத்தின்படி சம்மன் அனுப்பினோம். ஜாய் கிறிசில்டாவும் அவர் யார் மீது புகார் தந்தாரோ அந்த ரங்கராஜும் ஆஜராகியிருந்தாங்க.
திரும்பவும் இன்னொரு முறை ஆஜராக உத்தரவிட்டிருக்கிறேன்.
பெண்கள் யாராக இருந்தாலும் அவங்களுக்கு என்ன பிரச்னைனாலும் மகளிர் ஆணையத்துக்கு கொண்டு வர அவங்களுக்கு உரிமை இருக்கு. அப்படி வருகிற பட்சத்துல அந்தப் பிரச்னையில் தலையிட ஆணையத்துக்கும் சட்ட அதிகாரம் இருக்கு'' என முடித்துக் கொண்டார்.