கிட்னி முறைகேடு விவகாரம்: அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - சட்டமன்றத்தில் பட்டியலிட...
பென்சன் தொடர்ந்து கிடைக்க வேண்டுமா? - நவம்பர் 31 தான் கடைசி தேதி; நோட் பண்ணிக்கோங்க மக்களே!
ஓய்வுப்பெற்றவர்கள் தொடர்ந்து பென்சன் பெற ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தச் சான்றிதழ் சமர்ப்பிப்பை டிஜிட்டலிலும் செய்யலாம். ஆனால், பென்சன்தாரர்கள் அனைவருக்கு டிஜிட்டலில் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க தெரியுமா என்பது பெரிய கேள்விக்குறி.
அடுத்ததாக, கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் இருக்கும் பென்சன்தாரர்களுக்கு வயது மற்றும் உடல்நிலை காரணங்களால் வங்கிகளுக்கோ, தபால் அலுவலகத்திற்கோ சென்று வாழ்நாள் சான்றிதழை சமர்பிப்பதற்கு சிரமமாக இருக்கலாம்.
இதை எளிதாக்கும் வகையில் தான், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, பென்சன்தாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான முகாம்கள் நாடு முழுவதும் 2,000 மாவட்டங்களில் நடத்த உள்ளன.

எப்போது? எங்கே?
இந்த முகாம் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் 30 தேதி வரை நடக்க உள்ளது.
19 பென்சன் வழங்கும் வங்கிகள், இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கி, பென்சன்தாரர்கள் நலச் சங்கங்கள், பாதுகாப்புக் கணக்குகளின் தலைமைக் கட்டுப்பாட்டாளர் (CGDA), தொலைத்தொடர்புத் துறை, ரயில்வே, UIDAI, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றின் உதவியுடன் இந்த முகாம்கள் நடக்க உள்ளன.
இந்த முகாமிற்கு நேரில் வர முடியாதவர்களை அவர்களது வீட்டிற்கே அல்லது சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கே சென்று சான்றிதழ் வாங்கப்படும்.
வாழ்நாள் சான்றிதழ் சமர்பிக்க நவம்பர் 31-ம் தேதியே கடைசி தேதி.
நீங்களே டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பெறுவது எப்படி?
jeevanpramaan.gov.in இணையதளத்திற்கு சென்று டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்திற்கு ஆதார் எண் கட்டாயம் தேவை.
மேலும், இந்த விண்ணப்பத்தில் பெயர், மொபைல் எண், பென்சன் எண், பென்சன் வங்கி கணக்கு எண், வங்கித் தகவல்கள், ஓய்வூதிய ஒப்புதல் அதிகாரசபையின் பெயர், ஓய்வூதியம் வழங்கும் அதிகாரசபை போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
அதனால், இந்த இணையதளத்திற்குள் செல்வதற்கு முன்பு, இந்தத் தகவல்களைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
பின், இணையதளத்திற்குள் சென்று தகவல்களை நிரப்பி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை பெறலாம்.
இந்த இணையதளம் மொபைல் போன் ஆப்பாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.