`ஆபத்தான பட்டாசு ஆலை பணிகளில் ரோபோ' - கற்பனையாக ஒரு AI ஆல்பம்
'இன்பநிதியை வைத்து அடுத்தப் படம் எடுக்கிறாரா?'- மாரி செல்வராஜ் அளித்த விளக்கம்
மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது.
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம்.
இந்நிலையில் பைசன் படத்திற்கான செய்தியாளார் சந்திப்பு நேற்று (அக்.16) நடைபெற்றது.
அப்போது மாரி செல்வராஜிடம் 'இன்பநிதியை வைத்து நீங்கள் படம் எடுக்கப்போவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
உண்மையிலேயே இன்பநிதியை வைத்து படம் எடுக்கப்போகிறீகளா? ' என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், " அது அதிகாரப்பூர்வமான செய்தி கிடையாது. உதய் சார் எனக்கு ரொம்ப நெருக்கம்.
அவரிடம் நன்றாக பேசுவேன். அடிக்கடி சந்திப்போம். இன்பநிதி இப்போது படித்துக்கொண்டிருக்கிறார். ரெட் ஜெயிண்ட்டில் எனக்கு வேறு ஒரு கமிட்மென்ட்தான் இருக்கிறது.

ஆனால் நான் சொல்கின்ற கதை அவர்களுக்கு பிடித்திருந்தால் எதிர்காலத்தில் அதுவும் நடக்கலாம்.
அடுத்து தனுஷ் சாரை வைத்து ஒரு படம் எடுக்கிறேன். அது மிகப்பெரிய படம். அதை முடிக்கவே ஒன்றரை வருடம் ஆகிவிடும் என்று நினைக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.