"விஜய்யின் கூட்டணிக்காக சட்டமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கிறதா?" -அதிமுக ராஜேந்...
Bison: "அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்"- மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது.
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறது.

அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம்.
இந்நிலையில் பைசன் படத்திற்கான செய்தியாளார் சந்திப்பு நேற்று (அக்.16) நடைபெற்றது.
அதில் பேசிய மாரி செல்வராஜ், " படத்திற்கு 'பைசன்' என ஆங்கிலத்தில் பெயர் வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டைக் கடந்து படத்தைக்கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியது.
என்னுடைய திரைக்கதைப் புத்தகத்தில் இன்னும் 'காளமாடன்' என்றுதான் உள்ளது" என்று கூறியிருக்கிறார்.