Ajith: `` `GBU'பெரிய அளவில் லாபம் ஈட்டவில்லை என்றாலும்" - `மைத்ரி மூவி மேக்கர்ஸ்...
``இந்தி மொழிக்கு தடையா? வதந்திகளைப் பரப்பாதீர்கள்" - TN Fact check
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களிலும் மத்திய பா.ஜ.க அரசு இந்தி மொழியை திணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணிக்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில், இருமொழிக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தி மொழிக்கு தடைவிதிக்கும் மசோதா நடந்துவரும் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகின.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி !
— TN Fact Check (@tn_factcheck) October 15, 2025
தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது.
இது…
இந்த தகவல் சமூக ஊடகங்களில் விவாதங்களை தொடங்கிய நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், ``தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி!
தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது. இது முற்றிலும் வதந்தியே. "அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை " என்று சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார். வதந்தியைப் பரப்பாதீர்!" எனக் குறிப்பிட்டிருக்கிறது.