No Marriage: 'கென்ஸ்' இருந்தால் போதும், கணவர் வேண்டாம் - சீனாவில் வைரலாகும் வினோ...
Rain Update: அரபிக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி; எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை?
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, அரபிக் கடலில் இன்று (அக்டோபர் 18) ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக, அடுத்த 4 நாள்களுக்கு (அக்டோபர் 22 வரை) மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று மேற்கு மாவட்டங்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.