DUDE: ``இது காதலின் உரிமை பற்றிப் பேசும் படம்'' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடக்கம்; இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி,
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகிய நிலையில், வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், கேரளா மாஹே, தெற்கு உள் கர்நாடகா, ராயலசீமா, கடலோர ஆந்திர பிரதேச பகுதிகளில் நேற்று தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை செய்யலாம்.
மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

முன்பு வெளியிட்டிருந்த அறிக்கையின் படி,
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.