செய்திகள் :

குன்னூர்: விடிய விடிய கனமழை, சாலையில் சரிந்த ராட்சத பாறைகள்; உயிர் தப்பிய பயணிகள்

post image

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

நேற்றிரவு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.

இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடநாட்டில் 86 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சாலையில் சரிந்த ராட்சத பாறைகள்
சாலையில் சரிந்த ராட்சத பாறைகள்

இதனால் நீரோடைகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்துப் பாய்ந்ததுடன், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையின் பல பகுதிகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மண்சரிவு
மண்சரிவு

குரும்பாடி பகுதியில் நேற்றிரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ராட்சதப் பாறைகள் அடித்து வரப்பட்டு சாலையில் விழுந்துள்ளன.

இதனால் போக்குவரத்து தடைப்பட்டதுடன், அந்த வழியாக வந்த கேரள அரசுப் பேருந்து ஒன்றின் மீது பாறைகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்து சேதமடைந்த நிலையில், அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். அவர்களைப் பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினர், பயணிகளுக்கு மாற்றுப் பேருந்தை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

சேதமடைந்த பேருந்து
சேதமடைந்த பேருந்து

ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு இரவோடு இரவாக சாலையை சீரமைத்து போக்குவரத்திற்கு வழிவகை செய்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடையவுள்ள நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்படும் அபாய பகுதிகளை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

``இன்று 21 மாவட்டங்களில் மழை'' - IMD வானிலை எச்சரிக்கை; தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை

இன்று அதிகாலை முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, திருச்சி, சிவ... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் எங்கெங்கு மழை பெய்யும்? - வானிலை அறிக்கை; வீக் எண்ட் பிளான் கவனம் மக்களே!

இன்றும், நாளையும் எங்கெங்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி, இன்று தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் க... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் வடகிழக்குப் பருவமழை; எந்தெந்த தேதிகளில்? - இந்திய வானிலை மையம்

இந்திய வானிலை மையம் நேற்று வாராந்திர வானிலை கணிப்பை வெளியிட்டது. வடகிழக்குப் பருவ மழை எப்போது? அதில் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர... மேலும் பார்க்க

அடுத்த 3 நாள்கள் தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - வானிலை மையம் அறிக்கை

'அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?' என்பதை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை மையம். நாளை கோவையின் மலைப்பகுதிகள், ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்... மேலும் பார்க்க

Rain Update: அக்டோபர் 10 வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பிற்பகலுக்குப் பிறகு மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் மாலை ஆரம்பிக்கும் மழை நள்ளிரவைத் தாண்டியும் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும்... மேலும் பார்க்க

எவரெஸ்ட் சிகரத்தில் கடும் பனிப்புயல்: 1,000 பேர் சிக்கித்தவிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிப்புயலால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட டிரெக்கிங் வீரர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே தி... மேலும் பார்க்க