Career: NLC-ல் பயிற்சிப் பணி; தமிழ்நாடு, புதுச்சேரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்; ...
`நீதிமன்றங்களில் அதிக குட்டுகள் வாங்கியதில் முதல் இடம்’ - திமுக அரசை விமர்சிக்கும் டாக்டர் சரவணன்
கரூர் சம்பவம் சம்பந்தமாக தமிழக அரசிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தது உச்ச நீதிமன்றம். மேலும் வழக்கு விசாரணையையும் சிபிஐ-க்கு மாற்றியுள்ளது உச்ச நீதிமன்றம். இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இதுகுறித்து டாக்டர் சரணவனன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி தனக்குத்தானே பெருமையாக பேசிக் கொள்கிறார்.

ஆனால், நிர்வாக சீர்கேட்டால் கடந்த நான்கரை ஆண்டுகளில் நீதிமன்றஙகள் மூலம் இந்தியாவிலேயே அதிக அளவில் கடும் கண்டனங்களையும், அதிக குட்டுகளையும் பெற்ற அரசாக திமுக அரசு உள்ளது. இதனால் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தான் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தோலுரித்து காட்டி வருகிறார்.

ஏற்கனவே சனாதனத்தைப் பற்றி விமர்சித்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளானார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு திமுக அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது, இப்படி பல சம்பவங்கள்.
அதுமட்டுமின்றி, கடன் வாங்கும் மாநிலங்களில் நாட்டிலேயே முதலிடம், லாக்கப் மரணங்களில் முதலிடம், போதைபொருள் நடமாட்டத்தில் முதலிடம், காங்கிரஸ்-திமுக கூட்டணி கொண்டு வந்த நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத மாணவர்களின் தற்கொலையில் முதலிடம் பெற்று தமிழகம் உள்ளது" என்றார்.