செய்திகள் :

ரத்ததான முகாம்: ``கலெக்டர் வரவில்லை, காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியது'' - தன்னார்வலர்கள் வேதனை

post image

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்ததான முகாம்களுக்கு ஏற்பாடு செய்யும் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வரவில்லை.

இதனால், கல்லூரி முதல்வர் சான்றிதழ் வழங்கினார். தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள இரத்ததான முகாம் நடத்துவதில் ஆர்வமுள்ளவர்களை விருதுநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று காலை அழைத்திருந்தனர்.

விருதுநகர் ஆட்சியர் சுகபுத்ரா
விருதுநகர் ஆட்சியர் சுகபுத்ரா

இவர்களுக்கு, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் நேரடியாக வழங்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது. இதனை நம்பி பலர் தங்களது சொந்தப் பணிகளை விட்டுவிட்டு, பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.

காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிவிடும் என ஏற்கனவே, அறிவிக்கப்பட்டதால், பலர் 9 மணிக்கே 6வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கிற்கு வந்து காத்துக்கிடந்தனர். ஆனால், காலை 10.30 மணியான போதும் நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை.

அப்போது, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த தன்னார்வலர்கள் காலதாமதம் ஏற்பட்டதால் கோபமடைந்தனர்.

எப்போது நிகழ்ச்சி துவங்கும், எப்போது கலெக்டர் வருவார் எனக் கேள்வி எழுப்பினர்.

சான்றுகள் வழங்கும் நிகழ்வு
சான்றுகள் வழங்கும் நிகழ்வு

இதையடுத்து அங்கிருந்த, அரசு மருத்துவமனை இரத்த வங்கி நிர்வாகிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து, கல்லூரி முதல்வர் ஜெயசிங்கிற்கு தகவல் கிடைத்தது. விரைந்து கூட்ட அரங்கிற்கு வந்த முதல்வர், இரத்ததான முகாம் ஏற்பாட்டாளர்களுக்கு உடனடியாக சான்றிதழ்களை வழங்கினார்.

இதுகுறித்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா கூறுகையில்,

"கலெக்டர் கையால் சான்றிதழ் பெறப் போகிறோம் எனப் பெருமையுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோம். ஆனால் வெறும் ஏமாற்றமே மிஞ்சியது.

இதற்கு எங்களை நிகழ்ச்சிக்கு அழைக்காமலேயே இருந்திருக்கலாம். பாராட்டுகளை எதிர்பார்த்தா? இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறோம்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் சாதாரண ஏழை, எளிய மக்களுக்காகவே உயிர் காக்கும் இச்சேவையை செய்து வருகிறோம்.

அதேவேளை, மாவட்ட ஆட்சியருக்கு ஏராளமான பணிகள் இருந்தால் முதலிலேயே வரமாட்டார் என அறிவித்திருக்க வேண்டும். அல்லது வேறொரு தினத்தில் கூட இந்நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம்" எனத் தெரிவித்தார்.

`பொறுப்புள்ள' சீனாவை எதிர்க்க இந்தியாவின் ஆதரவை நாடும் அமெரிக்கா! - என்ன பிரச்னை?

கடந்த வாரம், சீனா தனது 5 அரிய கனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தக் கனிமங்கள் செமிகண்டக்டர்கள், ராணுவ இயந்திரங்கள் போன்ற உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. `இது உலக நாடுகளைப் பாதி... மேலும் பார்க்க

முல்லை பெரியாறு: ``வெடிகுண்டு புரளி, கேரள அரசின் சதி; ராணுவத்தை நிறுத்தணும்'' விவசாயிகள் கண்டனம்

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்ட ஆட்சியருக்கு நேற்று முன்தினம் முல்லை பெரியாறு அணையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில்... மேலும் பார்க்க

காஸா போர் நிறுத்தம்: ட்ரம்ப் மட்டுமே உரிமைகோர முடியுமா? - இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா?

காஸாவுக்கான அமைதித் திட்டம் என ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தைவகுத்து அறிவித்தார். பெரும்பாலும் இஸ்ரேலுக்கேசாதகமாக இருந்த அந்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸும், இஸ்ரேலும்ஒப்புக் கொண்டன. காஸாவில் தாக்குதல் நின்றது. இ... மேலும் பார்க்க

SP Velumani வழக்கு: ADMK - DMK ரகசிய டீலிங்? | GAZA Deal: பேசுபொருளான Meloni | TVK | Imperfect Show

* காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது!* `நீங்கள் அழகான பெண்' - மெலோனி குறித்து ட்ரம்ப் சொன்னது என்ன?* `இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பீர்கள்தானே?' - ட்ரம்ப்* மீண்டும் ட்ரம்ப்பை நோபல் பரிச... மேலும் பார்க்க