கரூர் சம்பவம்: நீதிபதி குறித்து அவதூறு பதிவிட்ட தவெக நிர்வாகிக்கு ஜாமீன் - நீதிம...
``இன்று 21 மாவட்டங்களில் மழை'' - IMD வானிலை எச்சரிக்கை; தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை
இன்று அதிகாலை முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி,
வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுகோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்திய வானிலை மையம் அறிக்கை
கடந்த வாரம், இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை படி,
தமிழ்நாட்டில் பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
"அதன்படி, அக்டோபர் 16-18 தேதிகளில், பருவமழை இந்தியப் பகுதிகளில் விலகுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
அதே சமயம், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு அல்லது வடகிழக்கு திசைக் காற்று வீசலாம்.
அந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை வரும் அக்டோபர் 16-18 தேதிகளில் தொடங்கலாம்" என்று கூறப்பட்டிருந்தது.
இது கூட, இன்றைய மழைக்கான காரணமாக இருக்கலாம்.
Moderate rain with Thunderstorm and Lightning is very likely. At isolated places over Thiruvallur, Chennai, Chengalpattu, Kanchipuram, Villupuram, Cuddalore, Ranipet, Mayiladuthurai, Nagapattinam, Tiruvarur, Thanjavur and Pudukkottai districts Puducherry and Karaikal pic.twitter.com/ZHEqIo6VfU
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 14, 2025