செய்திகள் :

தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் வடகிழக்குப் பருவமழை; எந்தெந்த தேதிகளில்? - இந்திய வானிலை மையம்

post image

இந்திய வானிலை மையம் நேற்று வாராந்திர வானிலை கணிப்பை வெளியிட்டது.

வடகிழக்குப் பருவ மழை எப்போது?

அதில் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 16-18 தேதிகளில், தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் விலகுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

அதே சமயம், வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு அல்லது வடகிழக்கு திசைக் காற்று வீசலாம்.

அந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை வரும் அக்டோபர் 16-18 தேதிகளில் தொடங்கலாம்.

மழை
மழை

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்லாம்?

நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி,

இன்று நாளை கோவையின் மலைப்பகுதிகள், ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.

நாளை (அக்டோபர் 11, 2025), நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.

இங்கே கனமழை என்று குறிப்பிடப்படுவது 64.5 - 115.5 மி.மீ மழை ஆகும்.

அடுத்த 3 நாள்கள் தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - வானிலை மையம் அறிக்கை

'அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?' என்பதை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை மையம். நாளை கோவையின் மலைப்பகுதிகள், ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்... மேலும் பார்க்க

Rain Update: அக்டோபர் 10 வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பிற்பகலுக்குப் பிறகு மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் மாலை ஆரம்பிக்கும் மழை நள்ளிரவைத் தாண்டியும் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும்... மேலும் பார்க்க

எவரெஸ்ட் சிகரத்தில் கடும் பனிப்புயல்: 1,000 பேர் சிக்கித்தவிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிப்புயலால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட டிரெக்கிங் வீரர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே தி... மேலும் பார்க்க

இந்த வாரமும் கனமழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை மைய அறிக்கை

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த வாரமும் தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கைப்படி, இந்த வாரம் எந்தெந்த மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: டார்ஜிலிங்கில் கனமழை, நிலச்சரிவு: 17 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரக்கூடிய சுகியா போரியா, மிரியா போன்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ... மேலும் பார்க்க

Rain Update: அரபிக் கடலில் உருவான 'சக்தி' புயல்; தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

வடகிழக்கு அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது. நேற்று அது குஜராத் அருகே ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தது.அதன் பின், புயலாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீ... மேலும் பார்க்க