செய்திகள் :

அமெரிக்க ராணுவத்தின் ரகசிய ஆவணங்களைக் கையாண்ட இந்திய வம்சாவளி கைது - சீனாவுக்காக உளவு பார்த்தாரா?

post image

``புகழ்பெற்ற இந்திய வம்சாவளி வெளியுறவுக் கொள்கை நிபுணரும் பாதுகாப்பு மூலோபாய நிபுணருமான ஆஷ்லே ஜே டெல்லிஸ் தேசிய பாதுகாப்புத் தொடர்பான ரகசிய தகவல்களை சட்டவிரோதமாக தக்கவைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்" என்று வர்ஜீனியா கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

carnegie endowment
carnegie endowment

ஆஷ்லே ஜே டெல்லிஸ், சர்வதேச அமைதிக்கான கார்னகி அறக்கட்டளை என்ற உலகளாவிய ஆய்வு நிறுவனத்தில், டாடாவின் மூலோபாய விவகாரங்களுக்கான தலைவராவார் (Tata Chair for Strategic Affairs).

`கார்னகி அறக்கட்டளை' உலக அரசியல், பாதுகாப்பு, அமைதி மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் (Think Tank) நிறுவனமாகும்.

தடை செய்யப்பட்ட அரசு சொத்துக்களைக் கையாள்வது தொடர்பான ஃபெடரல் விசாரணையில் 64 வயதாகும் டெல்லிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை சட்டத்துக்குப் புறம்பாக வைத்திருப்பதையோ அல்லது தக்கவைத்துக்கொள்வதையோ தடைசெய்யும் 18 USC § 793(e) ஐ டெல்லிஸ் மீறியதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

National Security Council
National Security Council

குற்றம் நிரூபிக்கப்படும்வரை டெல்லிஸ் நிரபராதியாகக் கருதப்படுவார். மேலும் இதுவரையில் அவர் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை.

நிரூபிக்கப்பட்டால் டெல்லிஸ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்கொள்வதுடன் $250,000 (ரூ.2,21,50,080) அபராதமும் விதிக்கப்படும்.

யார் இந்த ஆஷ்லே ஜே டெல்லிஸ்?

டெல்லிஸ் அமெரிக்காவில் உள்ள தெற்காசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க-இந்தியா உறவுகளின் முன்னணி நிபுணராவார். இவர் அமெரிக்க அரசின் பல முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இவர் அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலாளரின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றியபோது, அமெரிக்க-இந்திய சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

American foreign policy expert Tellis
American foreign policy expert Tellis

தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறார். அரசாங்கப் பணிக்கு முன், டெல்லிஸ் RAND கார்ப்பரேஷனில் மூத்த கொள்கை ஆய்வாளராகவும் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

Striking Asymmetries: Nuclear Transitions in Southern Asia, Revising US Grand Strategy Toward China ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

`நீதிமன்றங்களில் அதிக குட்டுகள் வாங்கியதில் முதல் இடம்’ - திமுக அரசை விமர்சிக்கும் டாக்டர் சரவணன்

கரூர் சம்பவம் சம்பந்தமாக தமிழக அரசிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தது உச்ச நீதிமன்றம். மேலும் வழக்கு விசாரணையையும் சிபிஐ-க்கு மாற்றியுள்ளது உச்ச நீதிமன்றம். இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இதுகுறித்... மேலும் பார்க்க

`பொறுப்புள்ள' சீனாவை எதிர்க்க இந்தியாவின் ஆதரவை நாடும் அமெரிக்கா! - என்ன பிரச்னை?

கடந்த வாரம், சீனா தனது 5 அரிய கனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இந்தக் கனிமங்கள் செமிகண்டக்டர்கள், ராணுவ இயந்திரங்கள் போன்ற உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. `இது உலக நாடுகளைப் பாதி... மேலும் பார்க்க

முல்லை பெரியாறு: ``வெடிகுண்டு புரளி, கேரள அரசின் சதி; ராணுவத்தை நிறுத்தணும்'' விவசாயிகள் கண்டனம்

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்ட ஆட்சியருக்கு நேற்று முன்தினம் முல்லை பெரியாறு அணையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில்... மேலும் பார்க்க

ரத்ததான முகாம்: ``கலெக்டர் வரவில்லை, காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியது'' - தன்னார்வலர்கள் வேதனை

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரத்ததான முகாம்களுக்கு ஏற்பாடு செய்யும் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா வரவில்லை. இதனால், கல்லூரி முதல்வர் சான்றிதழ் வழங... மேலும் பார்க்க

காஸா போர் நிறுத்தம்: ட்ரம்ப் மட்டுமே உரிமைகோர முடியுமா? - இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா?

காஸாவுக்கான அமைதித் திட்டம் என ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தைவகுத்து அறிவித்தார். பெரும்பாலும் இஸ்ரேலுக்கேசாதகமாக இருந்த அந்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸும், இஸ்ரேலும்ஒப்புக் கொண்டன. காஸாவில் தாக்குதல் நின்றது. இ... மேலும் பார்க்க

SP Velumani வழக்கு: ADMK - DMK ரகசிய டீலிங்? | GAZA Deal: பேசுபொருளான Meloni | TVK | Imperfect Show

* காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது!* `நீங்கள் அழகான பெண்' - மெலோனி குறித்து ட்ரம்ப் சொன்னது என்ன?* `இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பீர்கள்தானே?' - ட்ரம்ப்* மீண்டும் ட்ரம்ப்பை நோபல் பரிச... மேலும் பார்க்க