செய்திகள் :

பைசன்: `மீண்டும் ஒரு முக்கியமான படைப்பு!' - மாரி செல்வராஜை பாராட்டி உதயநிதி பதிவு

post image

இன்று மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பதிவில்,

"பைசன் திரைப்படம் பார்த்தேன். மீண்டும் ஒரு முக்கியமான படைப்பைத் தந்திருக்கிறார் மாரி செல்வராஜ் சார்.

வன்முறை நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில், கபடி விளையாட்டில் சாதித்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரின் வாழ்வை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

ஓர் இளைஞன், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னுடைய கபடி விளையாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கையும், அதுவே அவனை இலக்கை நோக்கி உயர்த்துவதையும் தனக்கே உரிய பாணியில் மாரி சார் கிராஃப்ட் செய்திருக்கிறார்.

படம் பேசுகிற அரசியலை உள்வாங்கி மிகச்சிறப்பாக நடித்திருக்கும் தம்பி

துருவ் விக்ரம் உட்பட படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.

பைசன் - காளமாடன் வெல்லட்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/share/1FFPfp83pQ/

DUDE: ``இது காதலின் உரிமை பற்றிப் பேசும் படம்'' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படங்களில் முக்கியமானது ‘டுயூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித... மேலும் பார்க்க

Arasan: ``இதுவரை சிம்புவை இப்படி பார்த்திருக்கமாட்டீர்கள்'' - அரசன் புரோமோவைப் பார்த்த மிஷ்கின்!

சிம்பு நடிக்கவிருக்கும் `அரசன்' திரைப்படம் தனுஷ் நடித்திருந்த `வடசென்னை' படத்தின் கதையுடன் தொடர்புடையது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்களிடமும், திரைப்பட ஆர்... மேலும் பார்க்க

``இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கானது!" - `டியூட்', `டீசல்', `பைசன்' படங்களுக்கு வாழ்த்து சொன்ன சிம்பு

வருடந்தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவும்.பண்டிகை தினக் கொண்டாட்டங்களுடன், திரைப்படங்களை திரையரங்குகளில் கண்டுகளிக்க வேண்டுமென்பதும் பலருடைய வி... மேலும் பார்க்க

Vishal: `அது வதந்தி!' - விஷால் `மகுடம்' படத்தை இயக்குவதாக பரவிய தகவல்களுக்கு இயக்குநர் பதில்!

ஈட்டி', ஐங்கரன்' படங்களை இயக்கிய இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தற்போது மகுடம்' படத்தில் நடித்து வருகிறார் விஷால். இது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99-வது திரைப்படம். இப்படத்தில் விஷாலு... மேலும் பார்க்க

Bison: ``எந்த நிகழ்வுகளும் உண்மையாகக் காட்டப்படவில்லை!" - ரிலீஸுக்கு முன் மாரி செல்வராஜ் அறிக்கை!

மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் பைசன்' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதுதான் `பைசன்' திரைப்படம் என இத்திரைப்படம் தொடங்... மேலும் பார்க்க