DUDE: ``இது காதலின் உரிமை பற்றிப் பேசும் படம்'' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்
இரவு 7 மணிக்குள் டின்னர்; கிடைக்கும் 10 பலன்கள்! எல்லோரும் ட்ரை பண்ணலாமே
எல்லா மருத்துவர்களும் தினமும் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடச் சொல்கிறார்கள்.
6 - 7 மணிக்குள் இரவு உணவை முடிப்பது எல்லோருக்கும் சாத்தியமா? இதை நடைமுறைப் படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன? இதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன? சென்னையைச் சேர்ந்த வாழ்க்கை விதிமுறை மற்றும் ஆன்டி ஏஜிங் ஆலோசகரான டாக்டர் கெளசல்யா நாதன் அவர்களிடம் கேட்டோம்.

விடியற்காலையில் நீராகாரம் குடித்துவிட்டு விவசாய வேலைக்குச் சென்ற நம் முன்னோர்கள், காலையில் 10 - 11 மணி வாக்கில் மதிய உணவையும், மாலை 6 மணி வாக்கில் இரவு உணவையும் முடித்து விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த உணவுமுறை ‘இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்’ (Intermittent fasting) என மருத்துவ வல்லுநர்களால் சொல்லப்படுகிறது. அந்த உணவுப்பழக்கம், இன்றைய வேகமான வாழ்க்கையில் பெரும்பாலானோருக்கும் சாத்தியப்படாது.
வேலை முடிந்து மாலை 7 மணிக்குள் வீடு திரும்பினாலும், அதற்குள் வீட்டில் உணவு தயாராக இருக்குமா என்பது விவாதத்துக்குரிய கேள்வியே. இதில், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான நெருக்கடிகள் இன்னும் அதிகம்.
எனவே, வேலைக்குச் செல்வோர் உட்பட யாராக இருந்தாலும், குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் இரவு உணவை கூடுமான வரை விரைவாக முடிப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இரவு 6 - 7 மணிக்குள் டின்னரை முடிக்கும் உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிக்க நினைப்பவர்கள், காலை 8 மணிக்குள் காலை உணவையும், பிற்பகல் 1 மணிக்குள் மதிய உணவையும் முடித்துவிட வேண்டும்.
இதற்கிடையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதைக் கூடுமானவரையில் தவிர்த்துவிட்டு, பசிக்கும் போது இளநீர், மோர், பழங்கள், ஜூஸ், உலர் பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
தூங்கச் செல்லும் முன்பு பசித்தால் வாழைப்பழம் அல்லது அரை டம்ளர் பால் எடுத்துக்கொள்ளலாம். சீக்கிரமே சாப்பிடுவதால் விரைவாகப் பசிக்குமோ என்று அதிக அளவில் சாப்பிடாமல், அந்த வேளை பசிக்கு ஏற்றவாறு அளவுடன் சாப்பிடுவதுதான் முறையானது.
தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை முடித்துவிட வேண்டும். ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், 4 - 6 வாரங்களில் இந்த உணவுமுறைக்கு ஏற்ப உடல் பழகிவிடும்.

‘6 மணிக்கு டின்னரை முடித்துவிட்டாலும், இரவு 10 மணிக்குப் பிறகுதான் தூங்குவேன், இடையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவேன்’ என்பவர்கள், இந்த உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிப்பதில் அர்த்தமே இல்லை.
நம் விருப்பத்துக்கு ஏற்ப மாறுபட்ட உணவு முறைகளையும் வாழ்வியல் முறைகளையும் கடைப்பிடிப்பது, உடலியல் கடிகார (Biological Clock) சுழற்சியை மாற்றி, உடல் நல பாதிப்புகளுக்கு வழிவகை செய்யும்.
பசி எடுக்கும்போதுதான் சாப்பிட வேண்டும். அடிக்கடி வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்கக் கூடாது. எந்த வேளை உணவாக இருந்தாலும், அரை வயிறு மட்டுமே நிரம்ப வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவு, வயிற்றை மட்டுமே நிரப்புவதாக இல்லாமல், சமச்சீரான சத்துகள் நிறைந்த தாகவும் இருக்க வேண்டும்.
முடிந்தவரை குறிப்பிட்ட டயட் என இல்லாமல், தங்கள் உடல்நலனுக்கும் வாழ்க்கைச்சூழலுக்கும் உகந்த உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே ஆரோக்கியமாக வாழலாம்.”

* செரிமான தொந்தரவுகள் குறையும்.
* உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
* சீக்கிரமே தூங்குவது வழக்கமாகும்.
* ஆழ்ந்த தூக்கம் சாத்தியப்படும்.
* அடுத்தநாள் சீக்கிரமாக எழுந்திருக்கலாம்.
* காலைக்கடனை எளிதாக முடித்து, தினப்பொழுதைப் புத்துணர்ச்சியுடன் தொடங்கலாம்.
* வாயுத்தொந்தரவுகள் கட்டுப்படும்.
* மூளையின் செயல்திறன் சீராக இருக்கும்.
* நீரிழிவு பாதிப்பு வருவதற்கான வாய்ப்பு குறையும்.
* ஒட்டுமொத்த உடலுறுப்புகளின் செயல்பாடுகளும் சீராகும்.
* அடிக்கடி தலைவலி அல்லது ஒற்றைத்தலைவலி பாதிப்பு இருப்பவர்கள்.
* நீரிழிவு நோயாளிகள்.
* இரவுப் பணிக்குச் செல்வோர் மற்றும் அடிக்கடி ஷிஃப்ட் மாறி வேலை செய்வோர்.
* 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறப்புக் குழந்தைகள்.
* மூத்த குடிமக்கள், உடல்நல பாதிப்புக்குச் சிகிச்சை எடுப்பவர்கள், இரவு உணவுக்கு முன்பும் பின்பும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள் ஆகியோர் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு, இந்த உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம்.