செய்திகள் :

போலாந்து: 15 வயதில் மகளைப் பூட்டி வைத்த பெற்றோர்; 42 வயதில் காவலர்களால் மீட்கப்பட்டது எப்படி?

post image

போலாந்து நாட்டில் 15 வயது மகளை, பெற்றோர் 27 ஆண்டுகளாக ஒரு சிறிய அறைக்குள் பூட்டி வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நடக்கக் கூட முடியாத நிலையில் 42 வயதில் அந்தப் பெண் மீட்கப்பட்டுள்ளார்.

போலாந்தீன் ஸ்விடோச்லோவிஸ் நகரில்தான் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிரேலா என்ற 42 வயது பெண், அவரது பெற்றோரால் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளார்.

1998 ஆம் ஆண்டு தனது 15 வயதில் கடைசியாக வெளியில் காணப்பட்ட மிரேலா, சமீபத்தில் ஒரு குடும்பத் தகராறு காரணமாக காவல்துறைக்கு வந்த அழைப்பின் பேரில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Her Parents Locked Her In A Room At 15. Rescued At 42
Her Parents Locked Her In A Room At 15. Rescued At 42

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், மிரேலா இருந்த அறையைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். அந்த அறை முழுவதும் ஒரு குழந்தையின் அறை போல காட்சியளித்திருக்கிறது.

ஒரு சிறிய படுக்கை, சிதறிக் கிடக்கும் பொம்மைகள் மற்றும் பூ வடிவிலான மேஜை மட்டுமே அங்கு இருந்துள்ளது. ஆனால், அந்த அறைக்குள் இருந்த மிரேலாவோ, 42 வயதில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல் பலவீனம் காரணமாக நடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

மிரேலாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், "இன்னும் சில நாட்கள் தாமதித்திருந்தால் மிரேலாவின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது. கடுமையான தொற்று காரணமாக அவர் மரணத்தின் விளிம்பில் இருந்தார்" என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து மிரேலாவின் பெற்றோரிடம் விசாரித்தபோது, அவர்கள் கூறிய பதில்கள் அதிகாரிகளை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தின.

மிரேலாவின் தாய் கூறுகையில், "அவளை அவ்வப்போது தோட்டத்திற்குள் நண்பர்களைச் சந்திக்க அனுமதிப்போம். அறையில் உள்ள பொம்மைகளைத் தூக்கி எறிய நேரம் கிடைக்கவில்லை" என்று சாதாரணமாகக் கூறியிருக்கிறார்.

இந்த மீட்பு சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நடந்திருந்தாலும், மிரேலாவின் மருத்துவச் சிகிச்சைக்காக அக்கம்பக்கத்தினர் நிதி திரட்டத் தொடங்கிய பின்னரே இந்த விஷயம் வெளி உலகிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No Marriage: 'கென்ஸ்' இருந்தால் போதும், கணவர் வேண்டாம் - சீனாவில் வைரலாகும் வினோத டிரெண்ட்!

திருமணம் என்ற கலாச்சாரம் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது இருக்கும் தலைமுறையினர்கள் தங்கள் சொந்த விருப்பங்களுக்கும், சுதந்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர... மேலும் பார்க்க

Gold: உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை; உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு - எங்கே?

உலகம் முழுவதும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சீனாவில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலக தங்கச் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூ... மேலும் பார்க்க

ஆன்லைன் ஆர்டர்: 2 ஆண்டுகள் ஏமாற்றி ரூ.21 லட்சத்துக்கு உணவு சாப்பிட்ட நபர் - சிக்கியது எப்படி?

ஜப்பானில் உள்ள பிரபல உணவு டெலிவரி செயலி ஒன்றில், 'ஆர்டர் செய்த உணவு வரவில்லை' எனப் பொய் கூறி, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1,095 முறை பணத்தைத் திரும்பப் பெற்று, ரூ.21 லட்சம் மதிப்புள்ள உணவை உண்டு ஏம... மேலும் பார்க்க

மும்பை ரயிலில் கர்ப்பிணிக்கு வலி, வீடியோ காலில் ஆலோசனை சொன்ன மருத்துவர்; பயணத்தில் சுகப்பிரசவம்!

மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும். அதுவும் காலை மற்றும் மாலை நேரத்தில் புறநகர் ரயிலில் ஏறுவதாக இருந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும். இரவு 10 மணிக்கு ... மேலும் பார்க்க

Arasan Promo : திரையரங்குகளில் திரையிடப்பட்ட `அரசன்' படத்தின் புரோமோ - கொண்டாடிய ரசிகர்கள்!

வெற்றி மாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் `அரசன்' படத்தின் புரோமோ வீடியோ இன்று வெளியாகியிருக்கிறது. இந்த புரோமோ வீடியோ வெளியிடுவதில் புதிய முயற்சியைக் கையாண்டிருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். ... மேலும் பார்க்க