Diwali Leave: ``அக்., 21 ஆம் தேதி பொது விடுமுறை" - தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக...
கரூர் 41 பேர் பலியான சம்பவம்: சி.பி.ஐ விசாரணை இன்று முதல் தொடக்கம் - பின்னணி என்ன?
தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கடந்த 27 - ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்நிலையில், தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், அவரது விசாரணை கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு நாட்கள் நடைபெற்று வந்த நிலையில், ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து, த.வெ.க மற்றும் பாதிக்கப்பட்டோர் தரப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 13-ம் தேதி, கரூர் துயர சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவினர் கண்காணிப்பில், சி.பி.ஐ விசாரணையைத் தொடங்க உள்ளது.
உச்சநீதிமன்றம் அக்டோபர் 13-ம் தேதி சி.பி.ஐ-க்கு வழக்கை மாற்ற உத்தரவிட்ட நிலையில், இன்று சி.பி.ஐ எஸ்.பி பிரவின்குமார் உள்ளிட்ட 4 அதிகாரிகள் கரூரில் முகாமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், கடந்த ஒரு வாரமாக கரூரில் தங்கி உள்ள ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவும் சி.பி.ஐ அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் ஆகியவற்றை ஒப்படைத்த பின்னர், சி.பி.ஐ அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையைத் தொடங்க உள்ளதாக கரூர் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.