செய்திகள் :

ஆணவப் படுகொலை: ``கண்துடைப்பு ஆணையம்; 4.5 ஆண்டுகளில் அமைத்த ஆணையங்களால் என்ன பயன்?" - அண்ணாமலை கேள்வி

post image

`நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆணவப் படுகொலைக்கெதிராக தனிச் சட்டம் கொண்டு வருவோம்' என்ற வாக்குறுதியோடு 2021 மே மாதம் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த ஸ்டாலின், சமீபத்தில் நெல்லை கவின் ஆணவக்கொலை தமிழ்நாட்டையே உலுக்கியபோதும் தனிச் சட்டம் விஷயத்தில் அமைதி காத்து, கடந்து சென்றார்.

தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டு, ``நடைமுறையில் உள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படையில் தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது'' என்று கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலினிடம் ஆளும் கூட்டணி கட்சிகளான வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியபோதும் எந்த மாற்றமும் இல்லை.

ஆணவப்படுகொலை விவகாரத்தில் ஸ்டாலின் அறிவிப்பு
ஸ்டாலின்

இவ்வாறிருக்க, அடுத்து சட்டமன்றத் தேர்தலுக்கு 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், ``ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்" என்று சட்டமன்றத்தில் இன்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின்.

இந்த நிலையில், கண்துடைப்புக்காக ஸ்டாலின் ஆணையம் அமைத்திருப்பதாக விமர்சித்திருக்கும் தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை, ``நான்கரை ஆண்டுகளாக தி.மு.க அமைத்த எண்ணற்ற குழுக்களால் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அண்ணாமலை, ``தமிழகத்தில், தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கெதிரான வன்முறை, 2021-ம் ஆண்டிலிருந்து, 2023-ம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளில், 68 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக, சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்தது.

இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது தி.மு.க அரசு.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்த நிலையில், சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை, நான்கு ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, தற்போது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதாக, சட்டசபையில் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஏற்கெனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த, முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அறிவித்தார்கள்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டிய இந்தக் குழு, கடந்த நான்கு ஆண்டுகளில், வெறும் மூன்று முறையே கூடியிருக்கிறது. இந்தக் குழுவின் தலைவரான முதலமைச்சர் இது குறித்து ஏன் பேச மறுக்கிறார்?

இது தவிர, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, காவல்துறை ADGP தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குழு என, அனைத்துமே செயலற்று இருக்கையில், மீண்டும் ஒரு ஆணையம் அமைத்திருப்பது யாரை ஏமாற்ற?

பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது தி.மு.க அரசின் நோக்கமாகத் தெரியவில்லை. கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் தி.மு.க அமைத்த எண்ணற்ற குழுக்களால், இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

`கிட்னிகள் ஜாக்கிரதை’ டு `உருட்டு கடை அல்வா’ - சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!

சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர்!சட்டசபையில் திமு... மேலும் பார்க்க

ட்ரம்ப் - புதின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை; அடுத்து, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவாரா ட்ரம்ப்?

நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றனர். அதில் முக்கிய பேசுபொருளாக ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் வணிகம் இருந்துள்ளது. ட்ரம்ப் ... மேலும் பார்க்க

4 கும்கிகளுடன் சுற்றி வளைப்பு - சிக்கியது கோவை ரோலக்ஸ் யானை

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் யானை, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ... மேலும் பார்க்க

கரூர்: ``மாற்றி மாற்றி பேசும் மா.சு, ரகுபதி; உடற்கூராய்வு கணக்கில் ஏன் குழப்பம்?'' - அண்ணாமலை கேள்வி

தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது.நேற்று முன்தினம் கரூர் சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது, 'கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ஏன், எப்படி வேகமாக உடற்கூராய்வு செய்யப்பட... மேலும் பார்க்க

சட்டமன்றத்தில் விவாதமான Kidney திருட்டு; foxconn சர்ச்சை: அமைச்சரின் அடடே விளக்கம் | Imperfect Show

* கிட்னிகள் ஜாக்கிரதை' என பேட்ஜ் அணிந்து அதிமுக-வினர்?* சிறுநீரக விற்பனை முறைகேடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்* கடன் சுமை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசின் விளக்கம் என்ன?* புதிதாக விண்ணப்பித்தவர... மேலும் பார்க்க

Stalin கையில் Candidates list, 50 பெண் வேட்பாளர்கள்? Diwali பரிசு! | Elangovan Explains

'எடப்பாடி, விஜய் என ஆறு சிக்கல்களால் தவிக்கிறார் மு.க. ஸ்டாலின்' என்கிறார்கள். இந்த சிக்கல்களை முறியடிக்க, புதிய வியூகங்களை வகுத்துள்ளார். முக்கியமாக பெண்கள் வாக்குகளை டார்கெட் செய்து புதிய திட்டங்கள்... மேலும் பார்க்க