செய்திகள் :

"ஆணவப் படுகொலையை தடுக்க ஆணையம்; விரைவில் உரிய சட்டம்" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

post image

நெல்லை கவின் ஆணவப்படுகொலை, திண்டுக்கல் ராமச்சந்திரன் என நாடுமுழுவதும் தினமும் ஆணவப்படுகொலைகள் சாதியின் பெயரால் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சாதியவாத சக்திகள் சாதிப் பெருமையைப் பரப்புவதால் ஏற்படும் விளைவுகளால் இந்தக் கொடூரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பட்டியல் சாதியினர் மட்டுமல்ல, அனைத்து சாதிகளிலும் இந்த ஆணவப்படுகொலைகள் நடக்கின்றன. இதைத் தடுக்க தேசிய அளவில் ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதுகுறித்து மாநில அரசும், மத்திய அரசும் கண்டுகொள்ளாமலே தவிர்த்து வருக்கின்றன.

தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடு சட்டமன்றம்

இந்நிலையில் இன்றைய தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின், ஆணவப் படுகொலையை தடுக்க ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழ்நாட்டில் அவ்வப்போது ஏதெனும் ஒரு தொகுதியில் நடக்கும் துயர சம்பவமான ஆணவப்படுகொலைகள், நம் நெஞ்சை உலுக்கி, ஒட்டுமொத்த சமூகத்தையே தலைகுனிய வைத்துவிடுகிறது.

பெண்கள் தங்கள் வாழ்வை தாங்களே தீர்மானிக்கும் உரிமையை பறித்துவிடும் ஆணாதிக்கமும் இந்தக் குற்றச் செயலான ஆணவப்படுகொலைக்குப் பின்னால் இருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

சுயமாரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ஆணப்படுகொலையைத் தடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி என்னிடம் கொடுத்தார்.

ஆணவப்படுகொலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி இந்த அநீதியைத் தடுக்க வேண்டும். ஆணவப்படுகொலைக்கு எதிரான சமூக மாற்றத்தில் சமூக நல இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், சமூக ஆர்வல அமைப்புகள், மக்கள் எல்லோருக்கும் இந்தப் பொறுப்பு இருக்கிறது. சாதிக்கெதிரான, ஆணவப்படுகொலைக்கு எதிராக, சமத்துவமின்மைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுத்துப் பேச வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையம் சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களைப் பெற்று, உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும், அதன் அடிப்படையில் அரசு விரைவில் சட்டங்கள் இயற்றும். "

`கேள்வியே கேட்கக் கூடாதா?’ - வேல்முருகன் VS துரைமுருகன்; களேபரமான சட்டமன்றம்!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. நீர்வளத்துறை தொடர்பான விவாதம் இன்று நடைபெறுகையில் சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஏ.எம்.முனிரத்தினம்சோளிங்கர் ஏரி மதகு அடைபட்டு ... மேலும் பார்க்க

"கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையம்; தமிழ் அதிகாரிகள் இடம்பெறக் கூடாதா?" - சீமான் கண்டனம்

கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக் ... மேலும் பார்க்க

"விஜய்யின் கூட்டணிக்காக சட்டமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கிறதா?" -அதிமுக ராஜேந்திர பாலாஜி பதில்

Qசமீபத்தில் எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணியாக இருக்கும்" என்று பேசி கூட்டத்தில் தவெக கொடி அசைவதைப் பார்த்து, "இப்போவே கொடி அசைத்து பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என்று அதிமுக ... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை: ``புதிதாக விண்ணப்பித்தோருக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல்"- உதயநிதி சொன்ன அப்டேட்

2023ம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகிக்கும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட... மேலும் பார்க்க

`₹15,000 கோடி முதலீடு; 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு' -தமிழக அரசு அறிவிப்பு; foxcon நிறுவனம் மறுப்பு

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியிருந்தார். இந்த சந்திப்பின்போது ஃபாக்ஸ்கான் நிறுவனம் ₹15,000 கோடி முத... மேலும் பார்க்க

``இந்தி மொழிக்கு தடையா? வதந்திகளைப் பரப்பாதீர்கள்" - TN Fact check

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களிலும் மத்திய பா.ஜ.க அரசு இந்தி மொழியை திணிப்பதாக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணிக்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில், இரு... மேலும் பார்க்க