ஆணவப் படுகொலை: ``கண்துடைப்பு ஆணையம்; 4.5 ஆண்டுகளில் அமைத்த ஆணையங்களால் என்ன பயன்...
``ஒவ்வொரு நடிகருக்கும் தீபாவளி திருப்புமுனையாக இருக்கும்'' - 3 படங்களுக்கும் குவியும் வாழ்த்துகள்!
இந்த வருடம் தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழ் சினிமாவின் 3 வளரும்-ஹீரோக்களின் படங்கள் வெளியாகியிருக்கின்றன. துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாண் நடிக்கும் டீசல் மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டூட்.
3 படங்களுக்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் மூன்று படங்களும் வெற்றிபெற பைசன் படக்குழுவினர் வாழ்த்தியுள்ளனர்.

பைசன் - காளமாடன் படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், "பைசன் படத்துக்கு பத்திரிகையாளர்களிடம் இருந்து என்ன அன்பு... இன்னொரு மைல்கல்லைப் பதித்ததற்கு வாழ்த்துகள் மாரி செல்வராஜ். இது உன்னுடைய காலம் துருவ், என்ஜாய்!
ரசிகர்கள் நாங்கள் விரும்பும் அளவு இந்தப் படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறோம். உடன் ரிலீஸாகும் டீசல் மற்றும் டூட் படங்களுக்கும் என் வாழ்த்துகள்" என ட்வீட் செய்துள்ளார்.
மூன்று இளம் ஹீரோக்களின் படம் வருவதைக் குறிப்பிட்டு, "அடுத்த தலைமுறையை பெரும் ஆரவாரத்தோடு வரவேற்கும் இந்த தீபாவளி எல்லாருக்கும் சிறக்கட்டும் #Bison #dude #disel" என வாழ்த்தியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

மேலும் நடிகரும் நடிகர் சங்க செயலாளருமான விஷால், "இந்த தீபாவளிக்கு வெளியாகும் டூட், டீசல் மற்றும் பைசன் படங்கள் சூப்பர் வெற்றியைப் பெற வாழ்த்துகள்.
எல்லா நடிகருக்கும் தீபாவளி ஒரு திருப்புமுனையாக இருந்திருக்கிறது. பண்டிகை நாட்கள்தான் மிகப் பெரிய அளவில் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்கான நேரம்.
இந்த வருடம், நமக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் திறமையான மூன்று நட்சத்திரங்கள் உள்ளனர், பிரதீப், ஹரிஷ் மற்றும் துருவ் தங்கள் தனித்துவமான பாணியில் திறமையை வெளிக்காட்டத் தயாராக உள்ளனர்.
அவர்களுக்கும் மூன்று படங்களின் பிற நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் மிகப் பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி கிடைக்கட்டும்" என வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.