செய்திகள் :

``குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

post image

பிரதமர் மோடி குடிமக்களுக்கு சிறப்பு தீபாவளி செய்தியாக கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ``தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்ட பிறகு இது இரண்டாவது தீபாவளி. பகவான் ஸ்ரீ ராமர் நமக்கு நீதியை நிலைநிறுத்த கற்றுக்கொடுத்திருக்கிறார்.

மேலும் அநீதியை எதிர்த்துப் போராட தைரியத்தையும் தருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஆபரேஷன் சிந்தூரின் போது இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கண்டோம்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​பாரதம் நீதியை நிலைநிறுத்தியது மட்டுமல்லாமல் அநீதிக்குப் எதிராகவும் பழிவாங்கியது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்த தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் முதல் முறையாக, தொலைதூரப் பகுதிகள் உட்பட, நாடு முழுவதும் பல மாவட்டங்களில் விளக்குகள் ஏற்றப்படும்.

நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் வேரிலிருந்தே ஒழிக்கப்பட்ட மாவட்டங்கள் இவை.

சமீப காலங்களில், வன்முறைப் பாதையைக் கைவிட்டு, நமது நாட்டின் அரசியலமைப்பின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்துவதை நாம் கண்டிருக்கிறோம். இது நாட்டிற்கு ஒரு பெரிய சாதனையாகும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளுக்கு மத்தியில், நாடு சமீபத்திய நாட்களில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களிலும் இறங்கியுள்ளது.

நவராத்திரியின் முதல் நாளில், ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது. இந்த "ஜிஎஸ்டி பச்சத் உத்சவ்" (சேமிப்பு விழா) போது, ​​குடிமக்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைச் சேமித்து வருகின்றனர்.

பல நெருக்கடிகளைக் கடந்து செல்லும் உலகில், பாரதம் உறுதியையும், உணர்திறனின் அடையாளமாகவும் உருவெடுத்துள்ளது. எதிர்காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் நாம் இருக்கிறோம்.

"விட்சித்" (வளர்ந்த) மற்றும் "ஆத்மநிர்பர் பாரத்" (தன்னம்பிக்கை கொண்ட இந்தியா) என்ற இந்தப் பயணத்தில், குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு, தேசத்திற்கான நமது கடமைகளை நிறைவேற்றுவதாகும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

"சுதேசி தயாரிப்புகளை ஏற்றுக்கொண்டு பெருமையுடன் "இது சுதேசி!" என்று கூறுவோம். ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை ஊக்குவிப்போம்.

அனைத்து மொழிகளையும் மதிப்போம். தூய்மையைப் பேணுவோம். நமது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்போம்.

நமது உணவில் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்து யோகாவை நடைமுறைப்படுத்துவோம்.

இந்த முயற்சிகள் அனைத்தும் நம்மை "விட்சித் பாரதம்" (வளந்த நாடு) நோக்கி விரைவாக நகர்த்தும்.

ஒரு விளக்கு மற்றொரு விளக்கை ஏற்றும்போது, ​​அதன் ஒளி குறையாது, மாறாக அது மேலும் அதிகரிக்கும் என்பதை தீபாவளி நமக்குக் கற்பிக்கிறது.

அதே மனப்பான்மையுடன், இந்த தீபாவளியில் நமது சமூகத்திலும் சுற்றுப்புறத்திலும் நல்லிணக்கம், ஒத்துழைப்பு மற்றும் நேர்மறைத் தீபங்களை ஏற்றுவோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

தீபாவளி என்றாலே குதூகலம் தான் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் பட்டாசுகளை ஆர்வத்தோடு வெடித்து மகிழ்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பட்டாசுகள் எவ்வளவு அதிகமாக வெடிக்கபடுகிறதோ அதே அளவிற்கு காற்று... மேலும் பார்க்க

Lokpal: '7 BMW கார்கள்':`ஊழல் பற்றி கவலைப்படாமல் ஆடம்பரங்களில் திளைக்கும் லோக்பால்'- பிரசாந்த் பூஷண்

பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் போன்ற நாட்டின் அதிமுக்கியத் தலைவர்கள் மீது ஊழல் புகார் எழுந்தால் அதை சுதந்திரமாக விசாரிக்க உருவாக்கப்பட்... மேலும் பார்க்க

"உங்கள் திருமண ஆர்டருக்கு காத்திருக்கிறோம்" - ராகுல் காந்தியிடம் திருமணம் செய்யச் சொன்ன கடைக்காரர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் மிகவும் பழமையான சந்தாவாலா மிட்டாய் கடைக்கு மிட்டாய் வாங்க சென்றார்.அவரை கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் அன்புடன் வரவேற்றார். ராஜீவ் ... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டில் மழை அதிகமாகும் வாய்ப்பு; போர்கால நடவடிக்கை தேவை" - திமுகவை வலியுறுத்தும் பழனிசாமி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மாலை 4 மணி வர... மேலும் பார்க்க

புதின் போன் காலுக்குப் பின், ஜெலன்ஸ்கியை நெருக்கும் ட்ரம்ப் - என்ன நடந்தது?

ரஷ்யா - உக்ரைன் போர் பொறுத்தவரையில், ஆரம்பதில் இருந்தே அமெரிக்கா உக்ரைனின் பக்கம் நின்று வருகிறது.சுமுக உறவு ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும், அவர் பெரிதும் ஆதரவு தந்துவருவது அவரின் நண்பர... மேலும் பார்க்க

'ஒப்பந்தம் அல்லது 155% வரி' - மிரட்டும் ட்ரம்ப்; சீனா அடிப்பணியுமா?

சீனா தான் ஏற்றுமதி செய்து வந்த சில அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. 'இந்தக் கட்டுப்பாடுகள் உலக வர்த்தகத்தைப் பாதிக்கும்' என்று அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்... சீனப... மேலும் பார்க்க