"காதலர் தினத்தை விட இந்த நாளில் சிங்கிள்ஸ் அதிகமாக தனிமையை உணர்கிறார்களா?" - ஆய்...
'ஒப்பந்தம் அல்லது 155% வரி' - மிரட்டும் ட்ரம்ப்; சீனா அடிப்பணியுமா?
சீனா தான் ஏற்றுமதி செய்து வந்த சில அரிய கனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. 'இந்தக் கட்டுப்பாடுகள் உலக வர்த்தகத்தைப் பாதிக்கும்' என்று அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்... சீனப் பொருள்களுக்கு கூடுதல் 100 சதவிகித வரியையும் விதித்தது.
ட்ரம்ப் எச்சரிக்கை
கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கும் விதமாக நேற்று வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் "சீனா நம் மீது அதிக மரியாதையைக் கொண்டுள்ளது என்று நினைக்கிறேன். அவர்கள் வரி மூலம் நமக்கு நிறைய பணத்தைக் கட்டுகிறார்கள். இப்போது அவர்கள் நமக்கு 55 சதவிகித வரியைக் கட்டுகிறார்கள். இது மிகப்பெரிய தொகை ஆகும்.

இதுவரை பல உலக நாடுகள் அமெரிக்காவைப் பயன்படுத்தி கொண்டது. ஆனால், இனி அது நடக்காது. வரும் நவம்பர் 1-ம் தேதிக்குள் சீனா அமெரிக்கா உடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், சீனா தற்போது கட்டி வரும் 55 சதவிகித வரி 155 சதவிகிதமாக உயரலாம்" என்று பேசியுள்ளார்.
சீனா அடிபணியுமா?
அடுத்த சில வாரங்களில் ட்ரம்ப் - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நடக்க உள்ளது. இந்த நிலையில், ட்ரம்பின் இந்த நடவடிக்கைகள் இரு நாட்டின் உறவிலும் விரிசலை உண்டாக்கலாம்.
சீனா ட்ரம்பின் இந்த வரி அச்சுறுத்தல்களுக்கு பணியாது. காரணம், கடந்த ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா சீனா மீது 145 சதவிகிதம் வரை வரி விதித்தப்போது, சீனா எதிர்வினையாக வரி விதித்ததே தவிர, பணியவில்லை.
இதனால், ட்ரம்ப் செயல்கள் மீண்டும் அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக போரை உண்டாக்கலாம். இது பிற உலக நாடுகளையும் நிச்சயம் பாதிக்கும்.