"காதலர் தினத்தை விட இந்த நாளில் சிங்கிள்ஸ் அதிகமாக தனிமையை உணர்கிறார்களா?" - ஆய்...
H1B விசா: 'இவர்கள்' 1 லட்சம் டாலர்கள் கட்ட வேண்டியதில்லை; ஹேப்பி நியூஸ் சொன்ன அமெரிக்கா
கடந்த மாதம், ஹெச்-1பி விசா கட்டணமாக 1 லட்சம் டாலர் (கிட்டத்தட்ட ரூ.90 லட்சம்) என அறிவித்தது அமெரிக்க அரசு. இது உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியைக் கிளப்பியது.
இந்த விசாவைப் பெறும் 66 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்பதால் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நேற்று இந்த விசா குறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்கா

அதன் படி, ஏற்கெனவே அமெரிக்காவில் இருக்கும் ஹெச்-1பி விசாதாரர்களுக்கு இந்தக் கட்டணம் இல்லை.
தற்போது அமெரிக்காவில் மாணவர் விசாவில் இருக்கும் ஒருவர், ஹெச்-1பி விசாவிற்கு அப்கிரேட் ஆனாலும், அவர்களும் 1 லட்சம் டாலர் கட்ட வேண்டியதில்லை. ஆனால், இந்த இரண்டு நடைமுறைகளுக்கு இடையிலும் அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி இருக்கக்கூடாது.
புதிதாக ஹெச்-1பி விசா பெற்று அமெரிக்கா வருபவர்களும், ஹெச்-1பி விசா காலக்கெடு முடிந்து மீண்டும் விண்ணப்பிப்பவர்களும் 1 லட்சம் டாலர் கட்ட வேண்டும்.
இப்போது செல்லுபடி ஆகும் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியே செல்வதற்கும், மீண்டும் அமெரிக்கா திரும்புவதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் யாரும் செய்ய இயலாத பணிக்காக, வெளிநாட்டில் இருந்து ஒருவரை அழைத்து வந்தால், அவர்களுக்கு ஹெச்-1பி விசா கட்டணம் இல்லை.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.