பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலி...
BB Tamil 9: "பழைய கதையை விட்டுட்டு இங்க வருவோமா?" - விஜே பார்வதியிடம் காட்டமாகப் பேசிய கனி
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்டோபர் 21) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர்.
இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

கனி திரு இந்த வாரத்தின் தலைவராகப் பதவியேற்றிருக்கிறார்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பார்வதி, "குப்பையெல்லாம் என்னால எடுக்க முடியாது. இந்த வீட்டில எல்லோரும் இப்படிதான்... பத்து பேர் ஒரு விஷயத்தைச் செஞ்சு ஒருத்தர் அதைச் செய்யலனா அவுங்க கெட்டவுங்களா போயிடுறாங்க" என்று சொல்ல, "பழைய கதையை விட்டுட்டு இங்க வருவோமா?" என கனி கோபமாகப் பேசுகிறார்.