செய்திகள் :

``நெல் மூட்டைகள் தேக்கத்துக்கு மத்திய அரசு தான் காரணம்” - அமைச்சர் சக்கரபாணி

post image

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கு, அருள்மொழிப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ``தமிழகத்தில், கடந்த காலத்தில் குறுவை சாகுபடி 3.18 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், தற்போது 6.18 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. மாநில அளவில் நிகழ்கொள்முதல் பருவத்தில் 9 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.67 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு நெல் விளைச்சல் அதிகமாக இருப்பதால், கிட்டத்தட்ட மூன்று மடங்கு கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் சக்கரபாணி ஆய்வு

தினமும் 1,250 லாரிகளில், வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் அனுப்பப்படுகின்றன. ரயில் வேகன்கள் மூலமும் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 14 லட்சம் சாக்குகள் கையிருப்பு உள்ளது. இன்னும் 66 லட்சம் சாக்குகள் வரவேண்டியுள்ளது. சணல் இருப்பும் போதிய அளவில் கையிருப்பு உள்ளது. மூட்டைகளைக் கொண்டு செல்வதற்கான லாரிகள் இயக்கத்தில் சுணக்கம் இல்லை.

டெல்டா மாவட்டங்களில் மொத்தம் நான்கு ஆயிரம் லாரிகள் நெல் மூட்டைகளைக் கொள்முதல் நிலையத்திலிருந்து கிடங்குகளுக்கும், வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகின்றன. கூடுதலாக லாரிகள் தேவைப்பட்டால் வாடகைக்கு ஏற்பாடு செய்ய உள்ளோம்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஒரு நாளைக்கு 800 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. 2020ம் ஆண்டில் தான் 1,000 மூட்டைகளாக உயர்த்தினர். தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தான் ஒரு நாளைக்கு 800லிருந்து ஆயிரம் மூட்டைகள் என்பதை நிரந்தர உத்தரவாக பிறப்பித்தார். 100 கிலோ அரிசியில் ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க வேண்டும். இதற்கான விதிமுறைகளை மாற்றி 2025 ஜூலை 29ம் தேதி, மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் வந்தது. பிறகு, டெண்டர் விடப்பட்டு ஐந்து ஒப்பந்தக்காரர்கள் மூலம் விவசாயிகளிடம் பெறப்பட்ட 34 ஆயிரம் டன் நெல் வாங்கிய நிலையில், அவற்றில் 100 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ வீதம் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க வேண்டியுள்ளது. இதற்காக அந்த ஒப்பந்ததாரர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி அலுவலகத்துக்கு அரிசி தொடர்பாக பதிவேற்றம் செய்துள்ளனர்.

நெல் மூட்டைகள்

டெல்லியில் உள்ள குவாலிட்டி கண்ட்ரோல் அதிகாரிகள் அதனை கணினியில் ஆய்வு செய்து, அவர்கள் அறிக்கை தந்த பிறகு தான், செறிவூட்டப்பட்ட அரிசி கலக்க முடியும். இதுவரை மத்திய அரசிடம் இருந்து அந்த அனுமதி வரவில்லை. அதன் பிறகு தான் அரிசி ஆலைகளும் அதிகளவில் அரவையை மேற்கொள்ள முடியும்.

விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செரியூட்டப்பட்ட அரிசி வழங்க, மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல் மூட்டைகள் தேங்க காரணம். இது தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ஆக்ஸ்ட் மாதமே அனுமதி வந்து விட்டதாக சொல்லுகிறார். அப்படி வந்து இருந்தால், தேதியை சொல்லட்டும், அவர் ஏதோஏதோ பேசி வருகிறார்” என்றார்.

சபரிமலையில் குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் புதைந்த விவகாரம்; கேரள போலீஸ் DGP கூறுவது என்ன?

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று சபரிமலையில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதற்காக அவர் நேற்று கேரளா வந்தார். இன்று காலை திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பத்தனம்திட்டா க... மேலும் பார்க்க

"சித்தராமையா அரசியல் வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் உள்ளார்" - மகன் பேச்சால் சர்ச்சை; பின்னணி என்ன?

கர்நாடகா முதலமைச்சரும் அம்மாநில காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தனது அரசியல் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவரது மகன் யதீந்திரா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா காங்க... மேலும் பார்க்க

"காங்கிரஸ் கட்சியை மதிப்பவர்கள் மட்டுமே முதலவராக முடியும்" - மாணிக்கம் தாகூர்

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், `வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நின்று செல்லவில்லையே?’ என்ற கேள்விக்கு, ”இதுகுறித்து ரயில்வேத்துறை அமைச்ச... மேலும் பார்க்க

”நானும் குடும்பமும் பிழைப்போமான்னு தெரியல"- தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்-கண்ணீரில் பெண் விவசாயி

டெல்டா மவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக குறுவை அறுவடைப் பணிகள் நடந்து வரும் நிலையில் அரசு முன்கூட்டியே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகளைத் தொடங்கின. சாக்கு பாற்றக்குறை, நெல் மூட்டைகள் இர... மேலும் பார்க்க

"கல்லை கடவுளாக மாற்றத் தெரிந்த மனிதன் தன்னை மனிதனாக்க மறந்து விட்டான்" - அன்பில் மகேஸ்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் `தமிழ் முழக்கம்' மேடைப்பேச்சு - ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கத் தொடக்க விழா நடைபெற்றது. அன்பில் மகேஸ் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொ... மேலும் பார்க்க

``நெல் கொள்முதலில் அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது'' -எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு மடங்கு அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது; விளைச்சலும் அமோகம் என்கிறார்கள் விவசாயி... மேலும் பார்க்க