செய்திகள் :

"கல்லை கடவுளாக மாற்றத் தெரிந்த மனிதன் தன்னை மனிதனாக்க மறந்து விட்டான்" - அன்பில் மகேஸ்

post image

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் `தமிழ் முழக்கம்' மேடைப்பேச்சு - ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கத் தொடக்க விழா நடைபெற்றது.

 அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், பேச்சாளர் சுகிசிவம், உலக தமிழ்ச் சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, சட்டமன்ற உறுப்பினர் தளபதி கலந்துகொண்ட இவ்விழாவில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பள்ளி வளாகங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் மின் கசிவுகள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது, மழைக்காலங்களில் விடுமுறை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்றவரிடம்,

அமைச்சர் அன்பில் மகேஸ்
அமைச்சர் அன்பில் மகேஸ்

'கரூர் தவெக கூட்ட உயிரிழப்பு சம்பவத்தின்போது அழுததை எதிர்க்கட்சியினர் விமர்சித்தது குறித்த கேள்விக்கு "உணர்ச்சிகளும், அறிவும் சார்ந்து சமமான பேச்சுகள் அமைந்திட வேண்டும், இது பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். உணர்ச்சிகள் அதிகமாகி அறிவு குன்றி இருந்தால் விலங்குக்கு சமமானது, அறிவு அதிகமாகி உணர்ச்சிகள் குன்றி இருந்தால் அது மரத்திற்கு சமமானது என வள்ளுவர் கூறியுள்ளார், முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், ஒரு கல்லை கடவுளாக மாற்ற தெரிந்த மனிதன், தன்னை மனிதனாக்க மறந்துவிட்டான்" என்றார்.

`உடலுறவும் உளவும்; தற்செயல்போல் தான் இருக்கும், ஆனால்!’ - Silicon Valley-யை பதறவைக்கும் சீனா, ரஷ்யா?

'அடுத்த தலைமுறை போர்கள் துப்பாக்கிகளாலோ, ஏவுகணைகளாலோ இருக்காது. சைபர் தாக்குதல்களும், பயோ-வெப்பன்களும் பயன்படுத்தப்படும்' எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் அமெரிக்காவுக்கு எதிர... மேலும் பார்க்க

”நெல் மூட்டை மழையில் நனைந்து முளைத்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி நாடகம் ஆடுகிறார்” - உதயநிதி காட்டம்

நெல் கொள்முதல் பணிகள் விரைவாக நடக்காததால் கொள்முதல் நிலையங்களிலும், சாலையோரங்களில் நெல்லை கொட்டிவைத்து நாள்கணக்கில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பெய்த மழையால் பல இடங்களில் ந... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: “வயித்தெரிச்சல்ல இருக்கோம்; யார் பொய் சொல்றா?”- உதயநிதி குறிப்பிட்ட பெண் விவசாயி குமுறல்

நெல் கொள்முதலில் ஏற்பட்ட தாமதத்தால் அறுவடை செய்த நெல் மற்றும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் தொடர் மழையில் நனைந்ததில் முளைத்து சேதமடைந்ததாக டெல்டா விவசாயிகள் கூறி வந்தனர். இதையடுத்து கடந்த 22ம் ... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: ”விஜய்கோ, தவெக கட்சியினருக்கோ போதிய அரசியல் அனுபவம் இல்லை” – வைகோ

நண்பரின் மனைவி மறைவுக்குத் துக்கம் விசாரிப்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திண்டுக்கல் வந்திருந்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததை நாங்கள் வரவேற்... மேலும் பார்க்க

Silent Mode-ல் Vijay , EPS-ன் 3 வெடி , Stalin ஷாக்? | Elangovan Explains

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு, நெல் கொள்முதல் விவகாரம் என மூன்று ரூட்டில் இறங்கி ஆடத் தொடங்கியுள்ளார் எடப்பாடி. இதில் நெல் கொள்முதல் விவகாரத்தில், 'திமுக அரசு, விவசாயிகளை வஞ்சித்துவிட்ட... மேலும் பார்க்க