செய்திகள் :

இசையமைப்பாளர் சபேஷ் மறைவு: "இனி எந்த ஜென்மத்துல அண்ணன் தம்பியா பொறக்க போறோம்" - தேவா வேதனை

post image

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (அக்டோபர் 23) உயிரிழந்தார்.

அவரின் உடலுக்கு சென்னையில் உள்ள அவரது வீட்டில் திரையுலகினர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.

தனது சகோதரர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தேவா நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தேவாவின் தம்பி சபேஷ்
தேவாவின் தம்பி சபேஷ்

அப்போது தனது சகோதரர் சபேஷின் இழப்பு குறித்து பேசிய தேவா, ``எங்க குடும்பத்துல இதை நாங்க எதிர்பார்க்கவே இல்ல.

எனக்கு ரொம்ப பக்கபலம் சபேஷ் - முரளி. எங்க தம்பிக்கு இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல.

முந்தாநாள் ப்ரைன்ல ஸ்ட்ரோக் வந்து திடீர்னு சீரியஸ் ஆகிடுச்சு. எதாவது ஒரு மிராக்கிள் நடக்குமானுதான் ரெண்டு நாள் ஹாஸ்பிடல்லயே வச்சிருந்தோம். அப்படி நடக்கல.

25-ம் தேதி பாரிஸ்ல கான்செர்ட் இருக்கு. என் தம்பி இப்படி இருக்கும்போது நான் அங்க என்ன பாட்டு பாடப்போறேன். என்ன பாட்டு பாட முடியும்.

இப்படி ஒரு நிலைமை யாருக்குமே வரக்கூடாது. ஆனா எங்க குடும்பத்துக்கு வந்துருச்சு. இப்படி ஒரு தம்பிய நாங்க எங்க பாக்க போறோம்.

இதுக்கு அப்புறம் எந்த ஜென்மத்துல சபேஷ் எனக்கு தம்பியா பொறக்கப் போறாரு. இதோட எந்த ஜென்மத்துல சபேஷுக்கு அண்ணனா நான் பொறக்கப் போறேன்னு தெரியலை.

பாரிஸ் மக்கள், `இந்த நேரத்துல நீங்க வர வேண்டாம். அடுத்த வருஷம்கூட உங்க புரோக்ராம் வசிக்கிறோம்'னு சொன்னது ரொம்ப ஆறுதலா இருக்கு.

தம்பிகளுடன் தேவா
தம்பிகளுடன் தேவா

இன்னைக்கு ஒரு மியூசிக் டைரக்டரா உங்க முன்னாடி நிக்குறேன்னா அதுக்கு காரணமே என் தம்பிங்கதான்.

அவங்க இல்லனா இவ்ளோ படம் நான் பண்ணியிருக்க மாட்டேன். காலைல 7 மணியில இருந்து நைட் 11 மணி வரைக்கும் நாங்க எல்லோரும் பிரசாத் ஸ்டுடியோலயே வாழ்ந்துட்டு இருந்தோம்.

இன்னைக்கும் கான்செர்ட்டுக்கு அண்ணன் தம்பிங்க எல்லோரும் போயிட்டுதான் இருக்கோம். இந்த நேரத்துல எனக்கு ஒரு கையே போயிடுச்சு" என்று வேதனையோடு கூறினார்.

மேலும் தேவா, இன்று (அக்டோபர் 24) மாலை 4:30 மணிக்கு மேல் சபேஷ் உடலை நல்லடக்கம் செய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.

"திரையுலக பஞ்ச பாண்டவர்களில் ஒருவரை இழந்துட்டோம்" - ஆர்.வி.உதயகுமார், பேரரசு இரங்கல்

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக்குறைவால் நேற்று (அக்டோபர் 23) உயிரிழந்தார்.சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு திரையுலகினர் நேற்று முதல... மேலும் பார்க்க

போதைப்பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ED சம்மன்; பின்னணி என்ன?

தமிழ்த் திரைப்பட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா மீதான போதைப்பொருள் வழக்கில் அமலாக்கத்துறை (ED) தற்போது இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இருவரும் ... மேலும் பார்க்க

சபேஷ் மறைவு: ``அப்பாவ பார்க்கவே முடியல, ரொம்ப ஒடஞ்சிட்டாரு" - ஶ்ரீகாந்த் தேவா

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான சபேஷ் (68) உடல்நலக்குறைவால் நேற்று (அக்டோபர் 23) உயிரிழந்தார்.சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவரின் உடலுக்கு திரையுலகினர் நேற்று முதல் அஞ்சலி செலுத்த... மேலும் பார்க்க

'என் கனவு நிஜமாகிவிட்டது'- இயக்குநராகும் கென் கருணாஸ்; தொடங்கியப் படப்பிடிப்பு

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் 'அசுரன், விடுதலை 2, வாத்தி' போன்ற படங்களில் நடிகராக நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். த... மேலும் பார்க்க

Soori: "தம்பி, தவறான தகவலைப் பரப்புவது தீங்கையே தரும்" - பரவிய போலிச் செய்திக்கு நடிகர் சூரி பதிலடி

அரசியல் குறித்து நடிகர் சூரி பேசியது போல் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிய நிலையில், "தவறான தகவலைப் பரப்புவது எப்போதும் சமூகத்துக்குத் தீங்கையே தரும்" என்று விளக்கியுள்ளார் நடிகர் சூரி. நடிகர் சூரிசமூ... மேலும் பார்க்க