செய்திகள் :

சத்தீஷ்கர்: மகளின் ஸ்கூட்டர் கனவு; சாக்குமூட்டையில் சில்லறை; நெகிழ வைத்த விவசாயி

post image

சத்தீஷ்கரில் விவசாயி ஒருவர் தனது மகளின் கனவை நிறைவேற்ற செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அங்குள்ள ஜஸ்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பஜ்ரங் ராம். இவரது மகள் சம்பா பகத்.

இவர் விவசாயியான தனது தந்தையிடம் தனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கும்படி கேட்டார். ஆனால் விவசாயியான பஜ்ரங் ராமுவால் ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து ஸ்கூட்டர் வாங்க முடியவில்லை.

ஆனாலும் தனது மகளின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். இதற்காக தினமும் தனது கையில் கிடைக்கும் நாணயங்கள், ரூபாயை ஒரு உண்டியலில் போட்டுக்கொண்டே வந்தார்.

ஸ்கூட்டர்
ஸ்கூட்டர்

தொடர்ந்து 6 மாதங்கள் உண்டியலில் போட்டதால் குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்தது. உடனே அந்த நாணயங்களை ஒரு சாக்குமூட்டையில் போட்டு எடுத்துக்கொண்டு அங்குள்ள ஹோண்டா ஷோரூமிற்கு பஜ்ரங் ராம் சென்றார்.

ஷோரூம் மேலாளர் ஆனந்த் குப்தா விவசாயி பஜ்ரங் ராம் கதையைக் கேட்டு நெகிழ்ச்சியடைந்தார்.

உடனே நாணயங்களை வேண்டாம் என்று சொல்லாமல் அவற்றை அப்படியே வாங்கி ஊழியர்களிடம் கொடுத்து அவற்றை எண்ணச் சொன்னார். பஜ்ரங் குடும்பத்திற்குக் குடிக்க தேநீர் கொடுத்து உபசரித்தார்.

அதோடு அவர் தனது ஊழியர்களிடம், "இது பணத்தைப் பற்றியது அல்ல, இது கடின உழைப்புக்கான மரியாதை பற்றியது. நம் அனைவரையும் ஊக்குவிக்கும் ஒருவருக்குச் சேவை செய்வது ஒரு மரியாதை'' என்று தெரிவித்தார்.

நாணயங்களை எண்ணிப்பார்த்தபோது அதில் ரூ.40 ஆயிரம் இருந்தது. எஞ்சிய பணத்திற்கு கடன் கொடுக்கும்படி பஜ்ரங் ராம் தெரிவித்தார். அவர் கேட்டுக்கொண்ட படி கடனுதவியுடன் புதிய ஆக்டிவா ஸ்கூட்டர் விவசாயியிடம் கொடுக்கப்பட்டது. அந்த ஸ்கூட்டர் சாவியை தனது தந்தையிடம் இருந்து சம்பா தனது கையில் வாங்கியவுடன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

விவசாயி
விவசாயி

இது குறித்து அவர் கூறுகையில், ''இது எனக்கு வெறும் ஸ்கூட்டர் அல்ல, என்னுடைய தந்தையின் நம்பிக்கை, அவரது முயற்சி, மற்றும் காதல் எப்போதும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கும் என்ற செய்தி. இது என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள்" என்று அவர் தெரிவித்தார்.

ஸ்கூட்டர் வாங்கிய பஜ்ரங் குடும்பத்திற்கு ஷோரூம்பில் பரிசு முறையில் மிக்ஸர் கிரைண்டர் ஒன்றும் கிடைத்தது. அவர்கள் ஸ்கூட்டரை வாங்கிய வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாக பரவியது.

காசா: போரில் பிறந்த குழந்தைக்கு 'Singapore' எனப் பெயர் - நெகிழ வைக்கும் காரணம்

காசாவில் போருக்கு நடுவே பிறந்த பெண் குழந்தைக்கு 'சிங்கப்பூர்' எனப் பெயர் வைத்துள்ளனர் பாலஸ்தீனிய தம்பதி. இதற்கான காரணம் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது. சிங்கப்பூர் ஊடகமான Straits Times வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

புனே கோட்டையில் நமாஸ் செய்ததாகப் பரவிய வீடியோ; கோட்டை முழுதும் கோமியம் தெளித்த பாஜக MPக்கு எதிர்ப்பு

மகாராஷ்டிரா மாநிலம் புனே சனிவார்வாடாவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை 1732 ஆம் ஆண்டு கட்டப்பட்டது ஆகும். மகாராஷ்டிராவின் கலாசார நகரமான புனேயில் இருக்கும் இந்தச் சனிவார்வாடா கோட்டை மராத்... மேலும் பார்க்க

"காதலர் தினத்தை விட இந்த நாளில் சிங்கிள்ஸ் அதிகமாக தனிமையை உணர்கிறார்களா?" - ஆய்வில் வெளியான தகவல்

அயல்நாடுகளில் ஹாலோவீன் கொண்டாடும் பழக்கங்கள் உள்ளன. பொதுவாக ஹாலோவீன் என்பது வேடமிட்டு கொண்டாடும் பண்டிகை. சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த நாள் சிலருக்குத் தனிமையை உணர வைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.டேட... மேலும் பார்க்க

`காதலிச்சுட்டு ஏமாத்த பாக்குறியா?' - சகோதரியை கைவிட்ட நபர்; பழிவாங்கிய பெண்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயக்ராஜ் அருகில் உள்ள மெளமா என்ற கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ். இவர் அங்குள்ள சிமெண்ட் கம்பெனியில் வேலை செய்கிறார். உமேஷ் சகோதரர் மனைவி மஞ்சு. மஞ்சுவின் இளைய சகோதரி அடிக்கடி உம... மேலும் பார்க்க