செய்திகள் :

BB Tamil 9: ``அரோரா இருக்க இடத்துலதான் துஷார் இருப்பான்" - BB அப்சரா பேட்டி | Exclusive

post image

இந்த பிக் பாஸ் சீசனின் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.

முதலாவது வார எவிக்ஷனில் பிரவீன் காந்தி வெளியேறியிருந்தார். வீட்டிலிருந்து வெளியே வந்தவர் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பேட்டிகளில் பகிர்ந்திருந்தார். இரண்டாவது வாரத்தில் அப்சரா எலிமினேட் ஆகியிருக்கிறார்.

Bigg Boss Tamil 9
Bigg Boss Tamil 9

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்திருக்கும் அவரைச் சந்தித்து பேட்டி கண்டோம்.

நம்மிடையே பேசிய அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் விஷயங்கள் குறித்து வெளிப்படையாகவே பகிர்ந்திருக்கிறார்.

அப்சரா பேசும்போது, "இரண்டாவது வாரமே வெளியே வந்துட்டேன். சின்ன வருத்தம் எனக்குள்ள இருக்குதான்" எனத் தொடங்கியவர், ``நான் 7 வருஷமா மாடலிங் பண்ணிட்டு இருக்கேன். இதுக்குப் பிறகு கரியர்ல அடுத்த ஸ்டெப் போகணும்னு யோசிச்சுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்க முடிவு பண்ணினேன்.

நம்ம இந்த நிகழ்ச்சிக்குச் சரியான நபர்தான்னு தெரியும். தொடக்கத்தில், எல்லா விஷயங்களுக்கும் சகஜமாகி ஆட்டத்தைத் தொடங்க நேரமெடுத்தது. நான் ஆட்டத்தைத் தொடங்கின அப்போவே எலிமினேட் ஆகி வந்துட்டேன்.

சொல்லப்போனால் நான் எந்த ஸ்ட்ராடஜியும் வகுத்துட்டுப் போகல. போய் நல்லா விளையாடணும், தேவையான இடங்கள்ல சண்டை செய்யணும்னுதான் எனக்கு தோனுச்சு.

Apsara - BB Tamil 9
Apsara - BB Tamil 9

நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள சைலன்டாகவே இல்ல. முதல் நாள்ல இருந்து நிறைய விஷயங்கள் பண்ணினேன். லைவ் பார்த்தவங்களுக்கு அது தெரியும். நான் பேசிய பல விஷயங்களைச் சபைக்குள்ள அந்த விஷயத்தைப் பேசியிருக்கணும்.

ஆனா, பண்ணாமல் விட்டுடேன். முதல் நாளே சுபிக்ஷா, ‘நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள வந்திருக்கிற முதல் மீனவப் பொண்ணு. அதனால நான் ஜெயிக்கணும்’னு சொன்னாங்க.

நான் முதல் நாள் பெரிதளவுல பரிச்சயமில்லாதவர்கள்னு சுபிக்ஷாகிட்ட தனியாகப் போய் ‘நானும் ஒரு மீனவப் பொண்ணுதான். நான் மீனவப் பொண்ணு, அதனால ஜெயிக்கணும்னு சொல்ல வேண்டாம். நீங்க ஜெயிச்சதுக்குப் பிறகு, மீனவப் பொண்ணு ஜெயிச்சிருக்கானு சொல்லட்டும்’னு சொன்னேன்.

எனக்கு தப்புனு தோணின விஷயங்களை அப்போவே எதிர்த்துப் பேசினேன். மக்கள் 24 மணி நேர எபிசோட் பார்த்திருக்க மாட்டாங்க. அதனாலதான் வெளியே வரவச்சிருப்பாங்க. எவிக்ஷன் சமயத்துல, நான் உட்பட வீட்டுல இருந்தவங்க யாரும் நான்தான் எலிமினேட் ஆகப்போறேன்னு எதிர்பார்க்கல" என்றவர், "பிக் பாஸ் வீட்டுல இருந்த மற்ற போட்டியாளர்கள், என்னை ஒதுக்கி வச்சுட்டாங்க!

நானும் வியானாவும் ஸ்வீட்னு சொல்லியே எங்களை சீரியஸ் டிஸ்கஷனுக்குக் கூப்பிட மாட்டாங்க. லவ் விஷயத்தைப் பொறுத்தமட்டில் எதுவுமே சொல்ல முடியாது. யார் எப்படி நடிப்பாங்கனு தெரியாது.

Apsara - BB Tamil 9
Apsara - BB Tamil 9

ஆனா, உள்ள அது நடக்குது. ப்ரண்ட்ஷிப், லவ்னு எந்தவொரு எமோஷனல் பாண்டிங் வந்துட்டாலும் கேம் போயிடும். முதல் வாரத்துல சுபிக்ஷா ரொம்ப நல்லா விளையாடினாங்க.

ஆனா, அவங்க வியானாக்கூட க்ளோஸ் ஆனதுக்குப் பிறகு டவுன் ஆகிட்டாங்க. அதே மாதிரிதான் ஆதிரை, துஷார், அரோராவும். கேப்டன்சி தொடங்கி பல விஷயத்துல துஷார் முதல் வாரத்துல கோட்டை விட்டுட்டாரு.

அவருடைய கவனம் முழுவதுமா அரோராகிட்டதான் இருந்தது. உள்ள இருக்கிற போட்டியாளர்களுக்கே அரோரா எங்க இருக்காங்களோ அங்கதான் துஷார் இருப்பான்னு தெரிஞ்சிடுச்சு. அப்புறம், இதுவரைக்கும் ரம்யா அவங்களோட ஒரிஜினல் முகத்தைக் காட்டலைனுதான் நான் சொல்வேன்.

அதை அவங்க வெளிய கொண்டு வந்தால் நல்லாவே விளையாடலாம். ஆதிரையும் இந்த வாரம் டேஞ்சர்ல இருக்காங்க. கலையரசன் இந்த வாரம் எதாவது பண்ணினால் வீட்டுக்குள்ள இருக்கலாம்.

க்ரிஞ்சான விஷயங்களாக இருந்தாலும் திவாகர் எதையாவது பண்ணீட்டே இருக்காரு. பொண்ணுங்ககிட்ட போய் லவ் பண்றியா, கல்யாணம் பண்றியானு கேட்கிறதுனு எதாவது அவர் பண்ணிகிட்டேதான் இருக்காரு. பார்வதி இப்போ சரவெடியா இருக்காங்க.

Apsara - BB Tamil 9
Apsara - BB Tamil 9

அவங்களைப் பற்றி சோசியல் மீடியாவுல கடந்த சில நாட்களாக நெகடிவ் டாக் இருக்கு. ஆனா, பார்வதி நடிக்கல. அவங்க அவங்களாவே இருக்காங்க!

அதுதான் எனக்கு அவங்ககிட்ட பிடிச்ச விஷயம். கம்ருதீன் நல்ல விஷயங்களுக்காகச் சண்டை போடுறார்னு நான் சொல்லமாட்டேன்.

சொல்லப்போனால், வீட்டுக்குள்ள நடக்கிற நிறைய விஷயங்கள் வேணும்னு பண்ற மாதிரியே இருக்குனு எனக்கு தோணியிருக்கு" என்றபடி முடித்துக் கொண்டார்.

முழுப் பேட்டியைப் பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்!

கெட்டி மேளம்: சக நடிகருடன் பிரச்னை செய்தாரா சிபு சூர்யன்? - பின்னணி என்ன?

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'கெட்டி மேளம்' சீரியலில் நடித்து வந்த ஹீரோ சிபு சூர்யன் தொடரிலிருந்து விலகியது குறித்து நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.தற்போது தொடரின் ஷூட்டிங் பெங்களூருவில் நடந்த... மேலும் பார்க்க

BB Tamil 9: "நான் சொல்றது உனக்கு புரியுதா? இல்லையா?"- திவாகருடன் மோதல்; கண் கலங்கிய விஜே பார்வதி

"கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேறி தற்போது 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருக... மேலும் பார்க்க

BB Tamil 9: ”உனக்காக என்னப் பேசிருக்கேன்'னு எனக்கு தெரியும்’ - மோதிக்கொள்ளும் பார்வதி, திவாகர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்டோபர் 21) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 16: `ஏதாச்சும் பண்ணுங்க பாஸ்' - பாரு, வியன்னாவின் போர்கொடி

வீடு பெருக்கும் ஒரு சிறிய வேலையைக்கூட செய்யாமல் முரண்டு பிடித்து அதற்காக ஒரு மணி நேரம் சண்டை போடுவது ஒவ்வொரு சீசனிலும் நடக்கிறது. இந்த எபிசோடை அதன் உச்சம் எனலாம்.இது பிக் பாஸ் வீடுகளில் மட்டுமல்ல. ஏறத... மேலும் பார்க்க

BB Tamil 9: 'வன்முறை வெடிக்கும்'- ஜூஸ் டாஸ்க்கால் கலவரமாகும் பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய (அக்டோபர் 21) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது.கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்... மேலும் பார்க்க