Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!
நேரு ஸ்டேடியம் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சத்தை வழங்கிய டேனி ஷெல்டர்ஸ் & சேயோன் சாரிட்டபிள் டிரஸ்ட்
நேரு ஸ்டேடியம் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சத்தை வழங்கிய டேனி ஷெல்டர்ஸ் மற்றும் சேயோன் சாரிட்டபிள் டிரஸ்ட்
சமூக நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டில் தனது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், டேனி ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் அதன் கார்போரேட் சமூகப் பொறுப்பு (CSR) பிரிவான சேயோன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் ரூ.20,00,000 (இருபது லட்சம் ரூபாய்) நிதியை நேரு மைதானம் அருகே புதிய உட்புற மைதானம் (Indoor Stadium) கட்டுவதற்காக வழங்கியுள்ளது.
நேரு மைதானத்தில் ஒரு முக்கியமான உட்புற விளையாட்டு மையத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த நலத் திட்டத்திற்கு ஆதரவாக டேனி ஷெல்டர்ஸ் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.

இது குறித்து டேனி ஷெல்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு. சிவராமன் கந்தசாமி கூறுகையில் “விளையாட்டு என்பது இளைஞர்களை ஊக்குவிக்கவும், ஒன்றிணைக்கவும், வலுப்படுத்தவும் கூடிய சக்திவாய்ந்த ஊடகமாகும். இந்த திட்டத்திற்கு நாங்கள் அளிக்கும் நிதி, எதிர்கால விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், சமூக பங்கேற்பை ஊக்குவிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.” என்றுக் கூறினார்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் க. கிரியப்பனவரும் (IAS) தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு கூறியதாவது: “இந்த மிகுந்த தேவை கொண்ட உட்புற மைதான திட்டத்தில் டேனி ஷெல்டர்ஸ் இணைந்ததற்காக என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கோயம்புத்தூரைப் போன்ற எழுச்சி மிக்க நகரத்திற்கு இது மிகவும் தேவையான ஒரு வசதியாகும். அரசு மற்றும் தொழில் துறை இணைந்து மக்கள் நலனுக்காக உலகத் தரமான உள்கட்டமைப்புகளை உருவாக்கும் இந்த முயற்சி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.'
டேனி ஷெல்டர்ஸ் சேயோன் (Seyon) அறக்கட்டளை மூலமாக சாலைப்பாதுக ாப்பு, கல்வி, மருத்துவம், சமூக பாதுகாப்பு சேவைகள் போன்ற பிற சேவைகை ளயும் செய்து வருகிறது.
CSR முயற்சிகளைத் தவிர, டேனி ஷெல்டர்ஸ் தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியமான திட்டங்களை முன்னெடுத்துள்ளது. கோயம்புத்தூரின் மூன்று பகுதிகளில் மொத்தமாக 1.8 மில்லியன் சதுர அடி கட்டிட பரப்பளவைக் கொண்ட ஐ.டி. பூங்காக்கள் (IT Parks) கட்டப்படவுள்ளன. இதில் சரவணம்பட்டியில் இருக்கும் ஒரு திட்டத்தின் கட்டுமானம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

இந்த பெரிய அளவிலான ஐ.டி. மேம்பாட்டு திட்டங்கள் பெருமளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும், மற்றும் கோயம்புத்தூரின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கவுள்ளது. இது கோயம்புத்தூரை தென் இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப மற்றும் வணிக மையமாக மாற்றும் பணியை வலுப்படுத்தும்.
சமூக நலனும், பொருளாதார வளர்ச்சியையும் ஒருங்கிணைக்கும் இந்த இருமுக அணுகுமுறை, டானி ஷெல்டர்ஸின், வலிமையான மற்றும் வளமான கோயம்புத்தூரை உருவாக்கும் எண்ணத்தை இது பிரதிபலிக்கிறது.
















